ஒரு கோல் கூட அடிக்காத கேரளா பிளாஸ்டர்ஸ் – ஒடிசா எஃப்சி அணிகள்.. ஆட்டம் டிரா!

கொச்சி: ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஒடிசா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 report

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 18 ஆம் நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஒடிசா எஃப்சி அதிரடியாக மோதின. டாஸ் வென்ற ஒடிசா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டம் செம விறுவிறுப்பாக இருந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 report

44 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைநழுவிப்போனது. 45 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் ரானா மாற்றப்பட்டு டேனியல் களம் இறக்கப்பட்டார்.

என்னத்த ஆடுறாரு? டாப் கியரை போட்டு தூக்க வேணாமா? சீனியரா இருந்தாலும் பரவாயில்லை.. கழட்டி விடுங்க!!

பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இறுதிவரை இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் - ஒடிசா எஃப்சி அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் பகுதி தொடங்கியது. தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின, ஆட்டத்தின் 76 நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு ஒரு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது கைநழுவிப் போனது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 report

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதைத் தொடர்ந்து கேரளா பிளாஸ்டர்ஸ் - ஒடிசா எஃப்சி அணிகளுக்கிடையான ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 report
Story first published: Saturday, November 9, 2019, 15:05 [IST]
Other articles published on Nov 9, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more