For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

புதுமுகமாக தொடங்கி... நட்சத்திரமாக மாறிய சாஹல்.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் முக்கிய வீரர்!

திருவனந்தபுரம் : புதுமுக வீரராக தொடங்கி நட்சத்திர வீரராக மாறியுள்ள சாஹல் அப்துல் சமதின் பயணம் யாரையும் ஈர்த்துவிடும்.

கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்ஸி அணியில் சாதாரண ரிசர்வ் வீரராக இருந்தார் சமது. நடுக்கள வீரரான இவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் பிறந்தவர்.

ISL 2019-20 : Sahal says he is making sure pressure does not affect my game

வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட இவர் பிரதான அணியில் இடம்பிடித்தார். 2017/18 சீசனில் சாஹல் சமதுவின் அசத்தல் ஆட்டத்தை பார்த்த தலைமைப் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் அவரை கடந்த சீசனில் முன்னிலை வீரராக்கினார். இதன்பின் மளமளவென முன்னேற்றம் கண்டார் சாஹல் சமது.

22 வயதான சமது கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடவில்லை. இந்நிலையில் பிளாஸ்டர்ஸ் அணியில் சமதுவின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாகிவிட்டது. அவர் புகழ் எங்கும் பரவிவிட்ட நிலையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முனைந்துள்ளார் சமது.

நான் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் ரசித்து ஆடவே முயற்சிக்கிறேன். ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் இது போன்ற நெருக்கடிகள் வரத்தான் செய்யும். ஆனால் அது என் இயல்பான ஆட்டத்தை பாதிக்காதது போல் பார்த்துக் கொள்ளப்போவதாக கூறுகிறார் இந்த இளம் வீரர்.

ISL 2019-20 : Sahal says he is making sure pressure does not affect my game

சாஹல் சமதுவின் ஸ்டைலான, நுட்பமான ஆட்டத்தாலும் கவரப்பட்ட தேசிய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அவரை தனது அணியில் சேர்த்துக்கொண்டார். தாய்லாந்தில் நடந்த கிங்ஸ் கோப்பை போட்டியிலும் ஓமன் மற்றும் கத்தாருக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்திலும் இவர் இந்திய அணிக்காக ஆடினார்.

கடந்த மாதம் ஆசிய கோப்பை சாம்பியன் கத்தாருடனான ஆட்டத்தில் இந்தியா கோலற்ற டிரா செய்தது. இதற்கு சாஹல் முக்கிய பங்கு வகித்தார். எந்த ஒரு இளம் வீரருக்கும் நாட்டுக்காக ஆடவேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த கனவு எனக்கு நனவாகிவிட்டது' என்கிறார் சாஹல்.

ஹீரோ ஐஎஸ்எல்லின் 6வது சீசனுக்காக தயாராகி வருகிறார் சாஹல். 20ம் தேதி நடைபெறும் முதல் போட்டியிலேயே ஏடிகே அணியை கொச்சியில் சந்திக்கிறது பிளாஸ்டர்ஸ்.

ISL 2019-20 : Sahal says he is making sure pressure does not affect my game

இந்த சீசனில் அணியின் முக்கிய வீரராக தான் திகழ்வதை உணர்ந்தே உள்ளார் சாஹல். ஐந்தாண்டுகளில் 2 முறை கோப்பையை தவறவிட்ட கேரளா அணிக்கு இம்முறை அதை பெற்றுத்தர உறுதியாக உள்ளார் சாஹல்.

கேரளா பிளாஸ்டர்ஸ் தனது 2 வது வீடு போன்றது என்கிறார் சாஹல். தனது வளர்ச்சியில் அந்த அணிக்கு முக்கிய பங்குண்டு என்கிறார் இவர்.

கால்பந்து என்பது அணி விளையாட்டு என்பதால் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பு முக்கியமானது. அனைவருக்கும் ஒரே மாதிரியான நெருக்கடி உள்ளது. லட்சக்கணக்கான கேரள ரசிகர்களுக்காக ஆடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா அணிகளின் இலக்குமே கோப்பையாகத்தான் இருக்கும். எங்களுக்கும் அதுதான் லட்சியம். ஹீரோ ஐஎஸ்எல் சாம்பியன் ஆக வேண்டும் என விரும்புகிறோம்' என கூறுகிறார் சாஹல் சமது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, October 12, 2019, 20:17 [IST]
Other articles published on Oct 12, 2019
English summary
ISL 2019-20 : Sahal says he is making sure pressure does not affect my game. He started as a new face but now transformed into a star.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X