For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்!

மும்பை : வினித் ராய் இந்தியாவில் திறமையான புதிய மிட் ஃபீல்டர்களில் ஒரு முக்கியமானவராக கருதப்படுகிறார்.

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் கடைசி இரண்டு சீசன்களில் டெல்லி டைனமோஸ் அணியின் மிட்ஃபீல்டில் ஒரு முக்கிய பங்கு வகித்த அவர் இப்போது ஒடிசா எஃப்சியின் ஒரு பகுதியாக இருக்கிறார்.

ISL 2019-20 : Vinit Rai talks about his new run in Odisha FC

21 வயதில், வினித் ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார், ஆனால் இதைவிட இன்னும் சாதிக்க வேண்டும் என வினித் எதிர்பார்க்கிறார். வினித் தனது 15 வயதிலிருந்தே கால்பந்தில் மிகச் சிறப்பாக விளங்கி வருகிறார்.

ISL 2019-20 : Vinit Rai talks about his new run in Odisha FC

இது தொடர்பாக பேசிய வினித், ஆரம்பத்தில், கிளப்களில் விளையாட எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் நான் இப்போது ஒடிசா எஃப்சிக்கு அணிக்காக விளையாடுகிறேன். அதற்காக அந்த அணிக்கு நன்றி சொல்கிறேன். நான் இங்கே ஒரு வீரராக வளர்ந்திருக்கிறேன். பயிற்சியாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நான் நன்றி கூறுகிறேன், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவேன் என்று நம்புவதாக வினித் கூறினார்.

வினித்தைப் பொறுத்தவரை, கடந்த 2014-15 சீசன் லீக்கில் இரண்டு தோற்றங்களுடன் விளையாடத் தொடங்கினார். மினெர்வா பஞ்சாப் மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு செல்வதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டில் கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியுடன்தான் வினித்தின் முதல் ஐஎஸ்எல் போட்டிகள் தொடங்கின.

டெல்லி அணியில் சேர்ந்ததிலிருந்து, அவர் அந்த அணிக்காக தவறாமல் விளையாடினார். மேலும் அவர் கால்பந்தில் தனது உண்மையிலேயே தனது தேர்வு மிட்ஃபீல்டு என்பதை உணர்ந்து கொண்டார்.

ISL 2019-20 : Vinit Rai talks about his new run in Odisha FC

அவர் லீக்கில் விளையாடும்போது ஒரு பாஸ் போல தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் ஒரு சில பந்துகளை தவறவிட்ட போதிலும் சராசரியாக 40 க்கும் மேற்பட்ட பாஸ்கள் அவர் செய்தார். அவை அனைத்தும் கிட்டத்தட்ட 82.45 சதவீத துல்லியத்துடன் இருக்கும். இதுவரை வினித் லீக்கில் 2000 நிமிடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ளார். தற்போது அந்த சாதனையை வினித், ஒடிசா அணியின் வளர்ச்சிக்காக தொடர விரும்புகிறார்.

இதுபோன்ற பயிற்சியாளர்களின் கீழ் பயிற்சி பெறுவதற்கும், நல்ல வீரர்களுடன் விளையாடுவதற்கும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இது எங்கள் விளையாட்டுக்கு நாங்கள் பயன்படுத்தக்கூடிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்று கூறும் வினித். எல்லா நேரத்திலும் பந்தை வைத்திருப்பதை நான் விரும்புகிறேன், எனவே நான் இதில் அதிகம் ஈடுபட முடியும் என்கிறார்.

ISL 2019 : கோவா - பெங்களூரு இறுதிப் போட்டித் தோல்விகளில் இருந்து மீளப் போவது யார்?ISL 2019 : கோவா - பெங்களூரு இறுதிப் போட்டித் தோல்விகளில் இருந்து மீளப் போவது யார்?

இந்திய கால்பந்து அணியின் பாஸ் என்று அழைக்கப்படும் இகோர் ஸ்டிமாக் மிட்ஃபீல்டில் பந்தை நன்றாகப் பயன்படுத்தக்கூடிய வீரர்களை விரும்புகிறார், மேலும் வினித் அவர்களில் ஒருவராக இருப்பதால் குரோஷிய பயிற்சியாளரைக் கவர வாய்ப்பு உள்ளது. இந்தியா அணியில் இணைந்த பின்னர் பயிற்சியாளரின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே வினித் தேர்வு செய்யப்பட்டார்.

அதைப் பார்த்ததும் நான் சற்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் நான் வந்ததிலிருந்து அவர் எனக்கு வாய்ப்புகளை வழங்கியதற்கு அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் அவருக்கு கீழ் எனது முதல் அறிமுகத்தை மேற்கொண்டேன், அவருக்கு என் தகுதியை நிரூபிக்க நான் கடுமையாக உழைக்கிறேன் என்கிறார் புகழ்பெற்ற டாடா கால்பந்து அகாடமியின் பட்டதாரி வினித்.

Story first published: Monday, October 21, 2019, 19:53 [IST]
Other articles published on Oct 21, 2019
English summary
ISL 2019-20 : Vinit Rai talks about his new run in Odisha FC.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X