For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை.. ஐஎஸ்எல் இறுதிப் போட்டி குறித்து பேசிய கோவா கோச்!

மும்பை : மும்பை அரினா அரங்கில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீர் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணி கோவா அணியை வீழ்த்தி முதன் முறையாக ஐஎஸ்எல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

புள்ளி அட்டவணையில் டாப்பில் இருந்த ஒரு அணி முதன் முறையாக தற்போது ஐஎஸ்எல் கோப்பையை வென்றுள்ளது.

ISL 2019 - Both teams are not better than each other says Goa coach Sergio Lobera

கடந்த ஆண்டு ஆல்பர்ட் ரோக்கா தலைமையிலான பெங்களூரு அணி சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கோப்பையை கோட்டைவிட்டது. தற்போது கார்லஸ் குவாட்ரெட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு வெற்றி பெற்றுள்ளது.

ஆல்பர்ட் ரோகா மீண்டும் தனது குடும்பத்தினருடன் சென்று நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்பியதால் அவருக்குப் பதில் குவாட்ரெட் பதவி ஏற்றுக் கொண்டார். நான் பொறுப்பேற்றுக் கொண்டால் அணியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவேன் என வீரர்களிடம் தெரிவித்திருந்தேன்.

உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள்.. கோலி, தோனியுடன் இடம் பிடித்த ஒரே இந்திய வீராங்கனை!! உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள்.. கோலி, தோனியுடன் இடம் பிடித்த ஒரே இந்திய வீராங்கனை!!

கோவா அணி எங்கள் அணிக்கு ஒரு சவாலாக இருக்கும் என நினைத்தோம். அது போலவே இருந்தது. ஆனால் இந்த ராகுல் பெக்கே எந்த மூலையில் இருந்து வந்தாரோ அற்புதமாக கோல் அடித்தார். அதனால் இந்த ஆட்டத்தை வெல்ல முடிந்தது.

நாங்கள் பல முறை பெனால்டி வாங்க முயன்றோம். ஆனால் கோவா அணிக்கு அதிர்ஷ்டம் அது நிறைவேறவில்லை.

எங்களது அதிர்ஷ்டம் நாங்கள் ஒரு கோல் போட்டோம். அது எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த சீசனில் பெங்களூரு அணிக்கு கருவியாக இருந்த ஆல்பர்ட் செர்ரான் கைவிட வேண்டிய அபாயகரமான முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய டிஃபென்டர்களான ராகுல் பெக்கே, நிஷூ குமார் மற்றும் ஹர்மன்ஜோட் காப்ரா ஆகியோரது அருமையான ஆட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

அதே நேரத்தில் கோவா அணிக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சீசனில் ஃபெரான் கோரோமினாஸ் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். பெங்களூரு அணியில் பயிற்சியாளர் குவாட்ராட் அறிமுகப்படுத்திய மாற்றங்களைக் கேப்டன் சுனில் சேத்ரியும் ஒப்புக் கொண்டு அந்த கருத்தை தானும் ஆதரித்தார்.

அன்றைய ஆட்டத்தில் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா, தனது அணியினர் மிக நன்றாக விளையாடியதாக தெரிவித்தார். அதே நேரத்தில் தங்களது அணியின் அகமதுவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

பெங்களூரு அணி எங்களைவிட ஒன்றும் சிறந்த அணி கிடையாது. அதே நேரத்தில் எங்கள் அணியும் பெங்களூரு அணியைவிட சிறந்தது கிடையாது. இரு அணிகளுக்குமே அது மிகக் கடுமையான போட்டியாக இருந்தது. எங்கள் விருப்பப்படி நாங்கள் விளையாடினோம்.

நாங்கள் சிறப்பாக விளையாடிய அதே நேரத்தில் எங்களது வீரர்களின் ஆட்டம் குறித்து நான் மிகுந்த பெருமையை கொள்கிறேன் என்றார் செர்ஜியா லோபிரா.

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, March 19, 2019, 17:28 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
ISL 2019 - Both teams are not better than each other says Goa coach Sergio Lobera
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X