For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சென்னைக்கு எதிராக முதல் வெற்றி வேண்டும்.. துடிக்கும் பெங்களூரு!

கோவா : 2020-21 ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது,

இதுவரை பெங்களூரு அணி இந்த சீசனில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. சென்னை அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ISL 2020-21 : Chennaiyin FC vs Bengaluru FC Match Preview

பெங்களூரு அணி நல்ல வீரர்களை கொண்டு இருந்தும் இந்த சீசனில் தடுமாற்றமான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணி இந்த சீசனில் இதுவரை 12 ஷாட்களை மட்டுமே முயற்சி செய்துள்ளது.

கடந்த சீசன்களில் அந்த அணி தாக்குதல் பாணி ஆட்டத்தில் முன்னணியில் இருந்தது. ஆனால், இந்த சீசனில் அந்த வேகம் பெங்களூரு அணியிடம் இல்லை.

நடராஜன் இந்திய அணியின் சொத்து.. சூப்பரா வந்துக்கிட்டு இருக்காரு..உச்சி முகர்ந்த கேப்டன் விராட் கோலிநடராஜன் இந்திய அணியின் சொத்து.. சூப்பரா வந்துக்கிட்டு இருக்காரு..உச்சி முகர்ந்த கேப்டன் விராட் கோலி

முன் வரிசை வீரர்கள் சுனில் சேத்ரி, கிலேய்டன் சில்வா, கிறிஸ்டியன் ஆப்செத் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சென்னை அணி வீரர்களின் காயத்தால் அணியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும், அந்த அணி பெங்களூருவை விட வலுவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Story first published: Friday, December 4, 2020, 19:53 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
ISL 2020-21 : Chennaiyin FC vs Bengaluru FC Match Preview
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X