For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கடைசி வரை போராட்டம்.. ஒரு கோல் கூட இல்லை.. டிரா செய்த நார்த் ஈஸ்ட் - சென்னை!

கோவா : நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதிய போட்டி கோல் எதுவும் இன்றி டிராவில் முடிந்தது.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்த அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.

ISL 2020-21 : North East United FC vs Chennaiyin FC 26th match result

சென்னையின் எஃப்சி போட்டியின் முதல் நிமிடத்திலேயே கோல் அடிக்க முயற்சி செய்து தோற்றது. முதல் பாதியில் சென்னை அணி வசமே பந்து அதிக நேரம் இருந்தது. எனினும், இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

இரு அணிகளும் போட்டியில் பல முறை கோல் அடிக்கும் வாய்ப்பை பெற்றன. ஆனால், எந்த வாய்ப்பிலும் சரியாக கோல் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகளுக்கு இடையே ஆன போட்டி 0 - 0 என்ற அளவில் டிராவில் முடிந்தது.

இந்தப் போட்டியில் டிரா செய்ததன் மூலம் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணி மொத்தமாக 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஏடிகே மோகன் பகான் அணியுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டது.

சென்னையின் எஃப்சி அணி தன் கடைசி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாமல் தவித்து வருகிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடையவில்லை என்றாலும் டிரா செய்ததன் மூலம் அதிக புள்ளிகள் பெற முடியாமல் தவிக்கும் நிலை நீடிக்கிறது.

Story first published: Monday, December 14, 2020, 11:30 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
ISL 2020-21 : North East United FC vs Chennaiyin FC 26th match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X