For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

இதுதான் முதல்முறை.. கோல் அடிக்க விடாமல்.. ஒடிசாவை விரட்டிய ஹைதராபாத்!

கோவா : 2020-21 ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நான்காவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி, ஒடிசா அணியை வீழ்த்தியது.

கடந்த சீசனில் அறிமுகம் ஆகி இருந்த ஹைதராபாத் அணி இதுவரை எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்ததில்லை.

அந்த குறையை இந்த சீசனில் தன் முதல் போட்டியிலேயே நிவர்த்தி செய்து அசர வைத்தது.

லீக் போட்டி

லீக் போட்டி

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

போட்டியின் 6வது நிமிடத்திலும், 10வது நிமிடத்திலும் கோல் அடிக்கும் வாய்ப்பை பெற்ற அந்த அணி அதை நழுவ விட்டது. ஒடிசா அணி சாதாரண ஆட்டத்தை ஆடியது. அந்த அணியின் நகர்வுகளை ஹைதராபாத் அணி எளிதாக ஊகித்து ஆடியதால் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

பெனால்ட்டி வாய்ப்பு

பெனால்ட்டி வாய்ப்பு

35வது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அரிடேன் சான்டானா கோல் அடித்தார். ஒடிசா அணி 40வது நிமிடத்தில் தான் முதல் முறையாக பந்தை ஹைதராபாத் கோல் கீப்பர் அருகிலேயே கொண்டு சென்றது. ஆனால், அதுவும் கோலாக மாறவில்லை.

வெற்றி

வெற்றி

இரண்டாம் பாதியிலும் ஹைதராபாத் அணி பந்தை தன் வசமே அதிக நேரம் வைத்திருந்தது. சில கோல் வாய்ப்புகளை அந்த அணி வீணாக்கியது. எனினும், ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அசர வைத்த ஹைதராபாத்

அசர வைத்த ஹைதராபாத்

இதுவரை ஹைதராபாத் அணி எதிரணியை கோல் அடிக்க விடாமல் செய்தது இல்லை. அதை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே உடைத்து அசர வைத்தது. தன் இரண்டாவது ஐஎஸ்எல் சீசனை வெற்றியுடன் துவக்கி உள்ளது ஹைதராபாத் அணி.

Story first published: Tuesday, November 24, 2020, 10:02 [IST]
Other articles published on Nov 24, 2020
English summary
ISL 2020-21 : Odisha FC vs Hyderabad FC 4th match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X