For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

இது மட்டும் நடந்தா கொரோனா பயமே இருக்காது.. சந்தேகமே வராது - கங்குலி

கோவா : 2020 ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, அடுத்ததாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் லாக்டவுனுக்கு பின் முதன்முறையாக நடக்க உள்ள பெரிய விளையாட்டுத் தொடரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பற்றி வியக்க வைக்கும் கருத்தை கூறி உள்ளார்.

ஐபிஎல் கோப்பையை தவறவிட்டா என்னங்க... டிவிட்டர்ல சாதனை செஞ்சாச்சு... சிஎஸ்கே நன்றிஐபிஎல் கோப்பையை தவறவிட்டா என்னங்க... டிவிட்டர்ல சாதனை செஞ்சாச்சு... சிஎஸ்கே நன்றி

இந்தியன் சூப்பர் லீக்

இந்தியன் சூப்பர் லீக்

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 2020-21 சீசன் முழுவதும் கோவாவில் நடைபெற உள்ளது. இது அந்த தொடரின் ஏழாவது சீசன் ஆகும். இந்த தொடரில் கங்குலி உரிமையாளர்களில் ஒருவராக இருக்கும் ஏடிகே மோகன் பகான் அணியும் மோத உள்ளது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த நிலையில், இந்தியன் சூப்பர் லீக் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்தால் அது பல விளையாட்டுத் தொடர்களை சந்தேகமே இன்றி நடக்க உதவி செய்யும் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறி உள்ளார். அவரது கருத்து ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், இந்த தொடர் அனைவரின் சந்தேகத்தையும் தீர்க்கும் என அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

இந்தியாவில் இங்கே செல்லக் கூடாது, அங்கே செல்லக் கூடாது, இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது. இல்லையென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடும் என பாதிப்பை விட அச்சம் தான் அதிகமாக இருப்பதாக கூறிய கங்குலி, அதை ஐஎஸ்எல் தொடரின் வெற்றி நீக்கும் என கூறி உள்ளார்.

சவால்

சவால்

மேலும், பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் தொடரை துவக்க வேண்டும். அதற்கும் ஐஎஸ்எல் தொடரின் வெற்றி வழிவகுக்கும் என கங்குலி கூறி உள்ளார். 38 உள்ளூர் அணிகளை கொண்ட உள்ளூர் கிரிக்கெட் தொடரை நடத்துவது பிசிசிஐக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 20, 2020, 19:06 [IST]
Other articles published on Nov 20, 2020
English summary
ISL 2020-21 : Sourav Ganguly on how ISL success will affect other sports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X