ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் -வெற்றியுடன் தொடங்கியது சென்னை அணி

கோவா; ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் கடந்த சீசனில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இம்முறை புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், புதிய சீசனில் சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தை ஐதராபாத்தில் எதிர்கொண்டது. கோவாவில் பேம்புலின் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் ஐதராபாத் அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் ஐதராபாத் அணி வீரர் எடு கார்சியா அடித்த கோல் வாய்ப்பை, சென்னை அணியின் கோல் கீப்பர் விசால் கெயித் அபாரமாக தடுத்தார்

வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி.. அடி வாங்கும் இந்தியா ஏ அணிவென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி.. அடி வாங்கும் இந்தியா ஏ அணி

கோல் கீப்பர்

கோல் கீப்பர்

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஐதராபாத் அணிக்கு மற்றொரு கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணிக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பை அபாரமாக பாய்ந்து தடுத்தார் சென்னை அணியின் விசால் கெயித். இதனால் சற்று எரிச்சல் அடைந்த ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தும், கோல் போஸ்ட்டிற்கு வெளியே,அல்லது மேலே நோக்கியே பந்தை உதைத்தனர்.

திருப்புமுனை

திருப்புமுனை

இந்த நிலையில், ஆட்டத்தின் 2வது பாதியில் சென்னையின் எப்.சி. கை ஒங்கியிருந்தது. ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் சென்னை வீரர் சாங்ட்டே அடித்த பந்தை ஐதராபாத் கோல் கீப்பர் லெக்சுமிகாந்த் தடுத்தார். இதனைத் தொடர்ந்து தான் ஆட்டத்தில் திருப்புமுனை உருவானது. ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் ஹித்தேஷ் சர்மா, சென்னை அணியின் கேப்டன் அனிருத் தப்பாவை கீழே தள்ளி ஃபவுல் செய்தார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சென்னை வீரர் கோமன் கோலாக மாற்ற, 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தடுப்பாட்டம்

தடுப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து சென்னை அணி தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்த தொடங்கினர். பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க, அதனை கடத்த ஐதராபாத் வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதன் மூலம் ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பயிற்சியாளர் கருத்து

பயிற்சியாளர் கருத்து

இந்தப் போட்டில் ஐதராபாத் அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினாலும், அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற முடியவில்லை. வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் பேண்டோவிச், தாக்குதல் ஆட்டத்தில் தங்களது அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 29ஆம் தேதி நார்த ஈஸ்ட் யுனைடட் அணியை எதிர்கொள்ள உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ISL Season 8 Chennaiyin FC Kicks start the competition with Win over Hyderabad. Chennai converted the Penalty in to a Goal
Story first published: Wednesday, November 24, 2021, 11:48 [IST]
Other articles published on Nov 24, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X