For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

என்னா பரபரப்பு சாமி..!! ஐஎஸ்எல் இறுதிப்போட்டி.. கடைசி நேரத்தில் ஐதராபாத் சாம்பியனானது எப்படி??

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி ஐதராபாத் எஃப்சி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த முறை மும்பை இல்லை!!.. ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்?.. 3 அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு!! இந்த முறை மும்பை இல்லை!!.. ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்?.. 3 அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு!!

இதன் இறுதிப்போட்டியில் நேற்று கேரளா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி கோவாவில் உள்ள ஃபடோர்டா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இறுதி ஆட்டம்

இறுதி ஆட்டம்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் அட்டாக்கிங் கேம் விளையாடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இடைவேளையின்போது 0-0 என சமநிலை வகித்தன. நீண்ட நேரமாக இரு அணி வீரர்களுமே அதிரடி காட்டாததால் முதல் பாதியில் எந்தவித கோலும் கிடைக்கவில்லை.

விடாப்பிடி ஆட்டம்

விடாப்பிடி ஆட்டம்

பின்னர் 69 வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ராகுல் கேபி கோல் அடித்து அசத்தினார். இதனால் உஷாரான ஐதராபாத் அணி 88-வது நிமிடத்தில் டவோராவின் உதவியால் அட்டகாசமான கோல் அடித்து சமன் செய்தார். இதன் பின்னர் நீண்ட நேரமாக இரு அணிகளிடம் இருந்தும் ஒரு கோல் கூட வரவில்லை.

கடைசி நிமிட பதற்றம்

கடைசி நிமிட பதற்றம்

கடைசி நேரத்தில் யாராவது கோல் அடித்து முன்னிலை பெறுவார்களா என்ற பதற்றம் நீடித்து வந்தது. இறுதியில் 120 நிமிட போட்டிக்கு பிறகு இரு அணிகளும் சமனில் இருந்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஐதராபாத் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Recommended Video

IPL's Best Super Overs List | IPLக்கு Whistle Podu | OneIndia Tamil
பரிசுத்தொகை எவ்வளவு

பரிசுத்தொகை எவ்வளவு

ஐஎஸ்எல் தொடரில் ஐதராபாத் எஃப்சி பெறும் முதல் கோப்பை இதுவாகும். இதனையடுத்து அந்த அணிக்கு ரூ.6 கோடியும், இறுதி சுற்று வரை வந்த கேரளா அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த ஐஎஸ்எல் தொடர் முடிவுக்கு வந்துள்ளதால், கால்பந்து ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

Story first published: Monday, March 21, 2022, 9:20 [IST]
Other articles published on Mar 21, 2022
English summary
Hydrabad FC beats Kerala Blasters to clinch their maiden Trophy in ISL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X