For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

புதிய சாம்பியனா? மீண்டும் சாம்பியனா? இறுதிக்கட்டத்தை எட்டிய ஐஎஸ்எல் கால்பந்து தொடர்...ஒரு பார்வை

பேம்போலிம் : ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஐஎஸ்எல் கால்பந்து தொடர் லிக் மற்றும் ப்ளே-ஆப் சுற்றுகளை தாண்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள் இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள்

இன்று இறுதிப்போட்டியில் மோதவுள்ள இரு அணிகளும் லீக் போட்டிகளில் ஏற்கனவே 2முறை மோதிய நிலையில் மும்பை சிட்டி எஃப்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பழிவாங்க மோஹுன் பகன் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ்.எல்

ஐ.எஸ்.எல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி 5 மாதங்களாக நடைபெற்று வந்தது. மொத்தம் 11 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் தலா 20 ஆட்டங்களில் விளையாடியதன் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை சிட்டி எஃப்சி, ஏடிகே மோகன் பகான், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எஃப்சி, எஃப்சி கோவா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

ஃபைனலிஸ்ட்

ஃபைனலிஸ்ட்

மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல ஏடிகே மோகன் பகான் அணி 3-2 என்ற மொத்த கோல் அடிப்படையில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எஃப்சி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிகட்டம்

இறுதிகட்டம்

இந்நிலையில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பதோர்தா, நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது. லீக் சுற்றில் மோகன் பகான் அணியை 2 முறை வீழ்த்தியுள்ளதால் மும்பை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மேலும் முதல் முறையாக கோப்பையை வெல்ல மும்பை அணியும், 4வது முறையாக சாம்பியானாகும் முனைப்புடன் ஏடிகே அணியும் களமிறங்குவதால் இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மும்பைக்கு ஆதரவு

மும்பைக்கு ஆதரவு

மும்பை சிட்டி எஃப்சி அணி முதல் முறையாக ஐஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்த அணி கோப்பையை வெல்ல ஐபிஎல்-ன் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஹர்த்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், முன்னாள் வீரர் ஜாகீர் கான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, March 13, 2021, 19:21 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
Mumbai City FC vs ATK Mohun Bagan Clash today in ISL Final - Preview
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X