For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

VIDEO: மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து கால்பந்து வீரர் கடத்தல்..! இதுக்கு போயா கடத்துவீங்க?

ரோம்:இத்தாலியில் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவால் கால்பந்து உலகமே பரபரப்பானது.

சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரபலமான வீரர்கள்.. தமது கடைசி போட்டியை அற்புதமாக அமைத்து கொண்டு ஓய்வு பெறுவர். அவர் எந்த விளையாட்டில் ஜாம்பவானாக இருந்தாலும் சரி.

கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடி ஓய்வு பெறுவது மறக்க முடியாத தருணம். பிரபல கால்பந்து வீரர் ஸிடேன், உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் தலையால் முட்டி கோல் அடித்ததை யாரும் மறக்க முடியாது.

VIDEO: பெங்களூரு போட்டியில் சிக்சர் அடித்து பந்தை தொலைத்த கொல்கத்தா வீரர்...!! இணையத்தில் வைரல் VIDEO: பெங்களூரு போட்டியில் சிக்சர் அடித்து பந்தை தொலைத்த கொல்கத்தா வீரர்...!! இணையத்தில் வைரல்

கலக்கும் வீடியோ

கலக்கும் வீடியோ

சர்ச்சைகளும், சங்கடங்களும் கடைசி போட்டியில் ரவுண்டு கட்டி அடிக்கும். அது போன்றதொரு போட்டி தற்போது வினையாகி இருக்கிறது. அதுவும் கால்பந்து போட்டி ஒன்றில். இங்கல்ல... இத்தாலியில்.

கடைசி போட்டியில் விளையாடினார்

கடைசி போட்டியில் விளையாடினார்

இத்தாலியில் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் இக்னேஸியோ பார்பகால்லோ (55). அவர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாட தொடங்கினார்.

வந்தது ஹெலிகாப்டர்

சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு நடு மைதானத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள் சிலர், துப்பாக்கி முனையில் இக்னேஸியோவை கடத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

துப்பாக்கி முனையில் கடத்தல்

துப்பாக்கி முனையில் கடத்தல்

அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அந்த செய்தி உலகளவில் பரபரப்பானது. அதுவும் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து கடத்திச் சென்றனரா என்று அதிர்ச்சி அடைந்தனர்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

இது தொடர்பான வீடியோவும் இணையத்தை கலக்கியது. பின்னர்தான் தெரிந்தது இது சும்மா ஜாலிக்காக எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ என்று. அதனை அறிந்த போட்டி நிர்வாகம், அவரது அணியை இடைநீக்கம் செய்தது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

விளையாட்டுக்கும், தமாசுக்கும் பண்ணியதாக அவர் கூற, அபராதமும் விதிக்கப்பட்டது. அவரின் இந்த கோமாளித்தனமான இந்த நடவடிக்கையால் அந்த போட்டி யாராலும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

Story first published: Saturday, April 6, 2019, 13:06 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
Italian footballer marks his retirement with 'fake helicopter kidnapping'.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X