For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

4 முறை தொடர் வெற்றி... 5வது வெற்றிக்கு கங்கணம் கட்டும் மும்பை சிட்டி கோச்!

பேம்போலிம் : ஐஎஸ்எல்லின் 7வது சீசன் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய 28வது போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டியில் 4 முறை தொடர் வெற்றியை பெற்றுள்ள மும்பை சிட்டி அணியுடன் மோதவுள்ள ஜாம்ஷெட்பூர் தனது இரண்டாவது வெற்றியை பெற தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் தன்னுடைய ஐந்தாவது வெற்றியை தொடர கோச் செர்ஜியோ லோபெராவும் தீவிரம் காட்டி வருகிறார்.

மும்பை -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல்

மும்பை -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல்

ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி 25 போட்டிகளை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 28வது போட்டி இன்று பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை சிட்டி எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதவுள்ளன.

முதலிடத்தில் மும்பை சிட்டி

முதலிடத்தில் மும்பை சிட்டி

தொடர்ந்து 4 வெற்றிகளை சுவைத்து முதலிடத்தில் உள்ளது மும்பை சிட்டி எப்சி அணி. இந்நிலையில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிப் பயணத்தை தொடர அந்த அணியின் கோச் செர்ஜியோ லோபெரா தீவிரம் காட்டி வருகிறார்.

மெருகேற்ற வேண்டும்

மெருகேற்ற வேண்டும்

இந்நிலையில் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் இன்னும் அதிக தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் போட்டிக்கு போட்டி அணி தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் லோபெரா மேலும் தெரிவித்துள்ளார். வீரர்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜாம்ஷெட்பூர் கோச் பாராட்டு

ஜாம்ஷெட்பூர் கோச் பாராட்டு

இதனிடையே, மும்பை சிட்டி அணி மிகவும் சிறப்பானது என்று ஜாம்ஷெட்பூரின் கோச் ஓவன் கோயல் தெரிவித்துள்ளார். 3 டிரா மற்றும் ஒரு வெற்றியை பெற்றுள்ள அந்த அணி, மோஹுன் பகன் அணிக்கு எதிரான சிறப்பான செயல்பாட்டை போலவே இன்றைய மும்பை அணிக்கு எதிராகவும் காட்ட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Story first published: Monday, December 14, 2020, 15:24 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
We have to give top level of performance -said Coyle
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X