பெங்களூரு எப்சியை ஓட ஓட விரட்டிய ஜாம்ஷெட்பூர்... புள்ளிகள் பட்டியலிலும் முன்னேற்றம்

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 41வது போட்டி நேற்றைய தினம் பெங்களூரு எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

கோவாவின் படோர்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி கொண்டுள்ளது.

தோனி கொடுத்த சூப்பர் விருந்து... வீட்ல இருக்கற மாதிரியே உணர்ந்தேன்... தனஸ்ரீ நெகிழ்ச்சி தோனி கொடுத்த சூப்பர் விருந்து... வீட்ல இருக்கற மாதிரியே உணர்ந்தேன்... தனஸ்ரீ நெகிழ்ச்சி

இந்த வெற்றி மூலம் 13 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் 2020 புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு ஜாம்ஷெட்பூர் அணி முன்னேறியுள்ளது.

41வது போட்டி

41வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 41வது போட்டி நேற்றைய தினம் பெங்களூரு எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் 1க்கு 0 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் ஸ்டீபன் ஈஸ் அடித்த கோலினால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

13 புள்ளிகள்

13 புள்ளிகள்

ஜாம்ஷெட்பூர் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 13 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் 2020 புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது.

பெங்களூரு அணியில் மாற்றம்

பெங்களூரு அணியில் மாற்றம்

பெங்களூரு அணியின் கோச் கார்ல்ஸ் குவாட்ராட் அணியில் முக்கியமான இரண்டு மாற்றங்களை செய்திருந்தார். சுரேஷ் சிங் மற்றும் கிறிஸ்டியன் ஆப்செத் நேற்றைய போட்டியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த மாற்றங்கள் அந்த அணிக்கு வெற்றிக்கான வழியை கொண்டு வரவில்லை.

பலனளிக்காத வாய்ப்புகள்

பலனளிக்காத வாய்ப்புகள்

இதேபோல ஜாம்ஷெட்பூர் அணியிலும் ஐசக் வான்மால்சாவ்மாவிற்கு பதிலாக மோபஷீர் ரஹ்மானை அந்த அணியின் கோச் ஓவன் கோய்லே மாற்றியிருந்தார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் முதல் மூன்று நிமிடங்களிலேயே கோல் அடிக்கும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. தொடர்ந்து கோல் அடிக்கும் வாய்ப்புகள் அந்த அணிக்கு பலனளிக்கவில்லை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BFC continued to be on ascendancy but kept missing chances
Story first published: Tuesday, December 29, 2020, 18:46 [IST]
Other articles published on Dec 29, 2020

Latest Videos

  + More
  + மேலும்
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X