For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

என்னங்க இது.. 25 வயசுதான்.. மலேரியாவுக்கு வீழ்ந்த டோகோ கால்பந்து வீரர்

லோமே: கொரோனாவால் உலகமே நடுங்கிப் போய்க் கிடக்கும் நிலையில் ஆப்பிரிக்க நாடான டோகோ நாட்டில் ஒரு இளம் கால்பந்து வீரர் மலேரியாவுக்குப் பலியாகியுள்ளார். அவருக்கு வயது வெறும் 25 தான்.

டோகோ நாட்டு முதல் டிவிஷன் கால்பந்து அணியான ஏஎஸ்சி காரா அணிக்காக ஆடி வந்தார் இந்த வீரர். அவரது பெயர் கோஸ்ஸி கோடக்பா. 25 வயதாகிறது இவருக்கு.

கடந்த இரண்டு வருடமாக இவர் முன்ணனி ஸ்டிரைக்கராக உருவெடுத்து வந்தார். 2019 லீக் போட்டியிலும் இவரது அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

கொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம் கொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம்

மலேரியா

மலேரியா

கோடக்பாவுக்கு மலேரியா தாக்கியது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கோடக்பா மரணமடைந்தார். அவரது மரணம் டோகா கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கொரோனாவைரஸ் காரணமாக டோகோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் கால்பந்துப் போட்டிகளும் நடைபெறவில்லை.

சொந்த ஊருக்குப் போனார்

சொந்த ஊருக்குப் போனார்

கால்பந்துப் போட்டிகள் நடக்காத காரணத்தால் தான் வசித்து வரும் காரா நகரை விட்டு வெளியேறி தனது உறவினர்கள் தங்கியுள்ள டெவில் நகருக்குப் போயிருந்தார் கோடக்பா. இது தலைநகர் லோமேவுக்கு அருகில் உள்ளது. அங்கு வைத்துத்தான் அவருக்கு மலேரியா தாக்கியது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்த செய்தியை ஏஎஸ்சி காரா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மிகச் சிறந்த எதிர்காலம் அவருக்கு இருந்தது என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது.

பாதியில் கலைந்த கனவு

பாதியில் கலைந்த கனவு

மீண்டும் கால்பந்து ஆட ஆர்வமாக இருந்தார். எப்போது விளையாடுவோம் என்று காத்திருந்தார். ஆனால் அவரது கனவுகள் நிராசையாகி விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் அணி மேலாளர் ஜீன் மாரி எலோ. கோடக்பாவுக்கு ஏற்கனவே இருதயக் கோளாறும் இருந்ததாக தெரிகிறது. இதனால்தான் அவருக்கு சமீபத்தில் வந்த துனீஷியாவின் கிளப் யுஎஸ் டாட்டோயின் அணியில் விளையாடும் வாய்ப்பு தட்டிப் போய் விட்டது.

நண்பர்கள் சோகம்

நண்பர்கள் சோகம்

இருப்பினும் காரா அணி நிர்வாகம் இவருக்கு உரிய சிகிச்சை தருவதை உறுதி செய்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மலேரியாவுக்கு அவர் பலியாகி விட்டார். இந்த இளம் வயதில் கோடக்பா இறந்தது அந்த நாட்டு கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். இவ்வளவு விரைவில் அவர் போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவரது நண்பர் கோபி குயலி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 23, 2020, 12:03 [IST]
Other articles published on Jun 23, 2020
English summary
An young soccer player has died for Malaria in Togo
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X