For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வெற்றிக் கட்டாயத்தில் கேரளா அணி... ப்ளே -ஆப்பை விட்டு வெளியேறிய ஒடிசா எப்சி!

படோர்டா :ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 90வது போட்டி இன்றைய தினம் படோர்டா மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது.

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்சி அணிகள் இரண்டாவது முறையாக மோதவுள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ப்ளே-ஆப் கனவு நனவாகும். ஒடிசா எப்சி ஏற்கனவே ப்ளே -ஆப்பிலிருந்து தகுதி நீக்கம் ஆகியுள்ளது.

90வது போட்டி

90வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 90வது போட்டி இன்றைய தினம் கோவாவின் படோர்டா மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் கடந்த ஜனவரி 7ம் தேதி இந்த தொடரில் முதல் முறையாக மோதிய நிலையில் ஒடிசா அணி 4க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கேரளாவின் ப்ளே-ஆப் கனவு

கேரளாவின் ப்ளே-ஆப் கனவு

இதுவரை இந்த அணிகள் மோதியுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கேரளா அணியின் ப்ளே-ஆப் கனவு நனவாகும் என்பதால் இந்த போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ப்ளே-ஆப்பில் தகுதி நீக்கம்

ப்ளே-ஆப்பில் தகுதி நீக்கம்

ஒடிசா அணி புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ள நிலையில் ஏற்கனவே ப்ளே-ஆப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு எந்த உபயோகமும் இல்லை. ஆயினும் அந்த அணி 6 போட்டிகளில் தொடர் வெற்றி கண்டுள்ளது.

சுட்டிக் காட்டிய ஒடிசா கோச்

சுட்டிக் காட்டிய ஒடிசா கோச்

இந்த போட்டியில் வெற்றி பெற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று ஒடிசா கோச் ஜெரால்ட் பேய்டன் அறிந்துள்ள போதிலும், தங்களது அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரளா அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Story first published: Thursday, February 11, 2021, 21:56 [IST]
Other articles published on Feb 11, 2021
English summary
Odisha coach Gerald Peyton is aware that Kerala will be fighting for all that they have
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X