For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்

ஸ்பெயின் : கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா கால்பந்து போட்டியில் விளையாடிய பார்சிலோனா வீரர் மெஸ்ஸி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவரது இந்த செயலை அடுத்து அவருக்கும் அவரது அணிக்கும் கால்பந்து பெடரேஷன் அபராதம் விதித்துள்ளது. இதற்கு சர்வதேச அளவில் மெஸ்ஸியின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர் அஞ்சலி

தொடர் அஞ்சலி

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு உலக அளவில் பல்வேறு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்தனர். தொடர்ந்து அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி

அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி

இந்நிலையில் மரடோனாவின் தீவிர ரசிகரும் கால்பந்தாட்டத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி, மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக கால்பந்து பெடரேஷனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஸ்பானிஷ் லா லிகா தொடரில் விளையாடி வரும் மெஸ்ஸி மரடோனாவிற்கு மைதானத்தில் அஞ்சலி செலுத்தினார்.

முத்தங்களை பரிமாறி அஞ்சலி

முத்தங்களை பரிமாறி அஞ்சலி

ஒசாசுனாவிற்கு எதிரான பார்சிலோனா அணி மோதிய கடந்த போட்டியில் 0க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த போட்டியின் இறுதியில் தன்னுடைய அணியின் ஜெர்சியை கழற்றிய மெஸ்ஸி, உள்ளே அணிந்திருந்த மரடோனாவின் பழைய ஜெர்சியுடன் வானத்தை நோக்கி முத்தங்களை பரிமாறி மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.

கால்பந்து பெடரேஷன் நடவடிக்கை

கால்பந்து பெடரேஷன் நடவடிக்கை

இதையடுத்து போட்டியின் நேரம் முடிவடைவதற்குள் இவ்வாறு மெஸ்ஸி நடந்து கொண்டதாகவும், விதிமுறைகளை மீறி தனது அணியின் ஜெர்சியை கீழே வீசியதாகவும் கூறி அவருக்கு 600 யூரோக்களும் அவரது அணிக்கு 180 யூரோக்களும் அபராதம் விதித்துள்ளது கால்பந்து பெடரேஷன். இதையடுத்து மெஸ்ஸியின் ரசிகர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 3, 2020, 16:10 [IST]
Other articles published on Dec 3, 2020
English summary
Lionel Messi and Barcelona have been fined a combined 780 euros
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X