For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலகக்கோப்பை நாக் அவுட்டில் முதல் கோல்.. வரலாறு படைத்த மெஸ்ஸி.. ஜாம்பவான் மாரடோனா சாதனை முறியடிப்பு!

தோஹா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

22வது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்து நேற்றுடன் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உலகக்கோப்பை கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்த உலகக்கோப்பையை மெஸ்ஸி அல்லது ரொனால்டோ வெல்ல வேண்டும் என்று அதிகளவிலான ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.

 திக் திக் நொடிகள்.. இறுதியில் பாய்ந்த ஆஸ்திரேலியா.. மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா! திக் திக் நொடிகள்.. இறுதியில் பாய்ந்த ஆஸ்திரேலியா.. மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா!

1000 போட்டிகள்

1000 போட்டிகள்

இந்த நிலையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கி சாதனை படைத்துள்ளார். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 169 போட்டிகளிலும், பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளிலும், பிஎஸ்ஜி அணிக்காக 53 போட்டிகளிலும் மெஸ்ஸி களமிறங்கியுள்ளார்.

நாக் அவுட்டில் முதல் கோல்

நாக் அவுட்டில் முதல் கோல்

தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கியதோடு மட்டுமல்லாமல் 35வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோலையும் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்ஸியை சுற்றி இரு வீரர்கள் நின்று தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே 35வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், சாதுர்யமாக கோல் அடித்தார்.

விமர்சனங்களுக்கு பதிலடி

விமர்சனங்களுக்கு பதிலடி

அதேபோல் 5 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள லயோனல் மெஸ்ஸி, நாக் அவுட் போட்டிகளில் இதுவரை கோல் அடித்ததே இல்லை. இது மெஸ்ஸியின் கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் மெஸ்ஸி முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாட மாட்டார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாக் அவுட் போட்டியில் முதல்முறையாக கோல் அடித்து மெஸ்ஸி அசத்தியுள்ளார்.

மெஸ்ஸி சாதனை

மெஸ்ஸி சாதனை

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவின் சாதனையை மெஸ்ஸி தகர்த்துள்ளார். 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய மாரடோனா 8 கோல்கள் அடித்து இருந்தார்.

முறியடிப்பாரா மெஸ்ஸி?

முறியடிப்பாரா மெஸ்ஸி?

தற்போது மெஸ்ஸி 9 கோல்கள் அடித்து மாரடோனா சாதனையை தகர்த்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை மெஸ்ஸி விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, December 4, 2022, 1:59 [IST]
Other articles published on Dec 4, 2022
English summary
Star player Lionel Messi has created several records by scoring a goal in the World Cup knockout match against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X