For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை தண்டனை

By Veera Kumar

பார்சிலோனா: பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சிக்கு வரி ஏய்ப்பு வழக்கு ஒன்றில் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் 21 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.

அர்ஜென்டினாவின் ஸ்டார் வீரரான லியோனல் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காகவும் ஆடிவருகிறார். சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா தோற்ற நிலையில், கால்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். பார்சிலோனாவுக்காக ஆட உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Lionel Messi handed '21 months in prison' for tax fraud: Spanish media

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், அவர் மீது நிலுவையில் இருந்த வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள ஸ்பெயின் நாட்டு கோர்ட், இவருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இவரது தந்தை ஜார்ஜ் மெஸ்சிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இவர்கள் அப்பீல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மெஸ்சிக்கு 2 மில்லியன் யூரோ மதிப்புக்கும், அவரின் தந்தைக்கு 1.5 மில்லியன் யூரோ அளவுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஸ்பெயின் நாட்டு சட்டப்படி 2 வருடங்களுக்கு குறைந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறைவாசம் அனுபவிக்க தேவையில்லை என்ற விதிமுறை இருப்பதாக, ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

Story first published: Wednesday, July 6, 2016, 16:54 [IST]
Other articles published on Jul 6, 2016
English summary
Argentine superstar footballer Lionel Messi was today (July 6) handed a 21-month prison sentence for 3 tax frauds, according to reports in the Spanish media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X