For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கோப்பை முக்கியமல்ல.. நட்பு தான்.. நெய்மருக்கு ஆறுதல் கூறிய மெஸ்ஸி... இணையத்தை கலக்கும் வீடியோக்கள்!

பிரேசில்: கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி செய்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Copa America Final 2021 | Argentina Vs Brazil Interesting Highlights | Messi, Neymer

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வந்தது.

இன்று நடைபெற்ற இதன் இறுதிப்போட்டியில் பிரேசிலை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா கோப்பையை வென்றது.

 அந்த ஒரு கோல்.. 28 ஆண்டு கால கனவு நிஜமானது..கோபா அமெரிக்கா தொடரை வென்றது அர்ஜெண்டினா ரசிகர்கள் குஷி அந்த ஒரு கோல்.. 28 ஆண்டு கால கனவு நிஜமானது..கோபா அமெரிக்கா தொடரை வென்றது அர்ஜெண்டினா ரசிகர்கள் குஷி

இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது நடப்பு சாம்பியனான பிரேசில் நாட்டில் நடைபெறுவதால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டது.

விறுவிறுப்பான ஆட்டம்

விறுவிறுப்பான ஆட்டம்

நடப்பு சாம்பியனான பிரேசில், 1993-க்குப்பிறகு கோபா அமெரிக்கா கோப்பையையே வெல்லாத அர்ஜென்டினாவை தங்கள் சொந்த மண்ணில் சந்தித்தது. இதனால் பிரேசிலின் பக்கமே வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியா அதனை மாற்றி அமைத்தார். ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அவர் அடித்த கோல்தான் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

28 ஆண்டு கனவு

28 ஆண்டு கனவு

ஏஞ்சல் டி மரியாவின் கோலுக்கு பிறகு ஆட்டத்தில் எந்தவொரு கோலும் வரவில்லை. எனவே இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது அர்ஜெண்டினா. கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணி ஏந்தியுள்ளது. குறிப்பாக மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா வெல்லும் முதல் பெரிய கோப்பை இதுவாகும். கடந்த 2016ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று அந்த அணியால் வெல்ல முடியாமல் போனது.

வெற்றிக்கொண்டாட்டம்

வெற்றிக்கொண்டாட்டம்

இந்நிலையில் இந்த போட்டியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மெஸ்ஸி, தனது நாட்டிற்காக இதுவரை எந்த ஒரு முக்கிய கோப்பையையும் பெற்று தரவில்லை என்ற விமர்சனங்கள் வலுத்திருந்தது. ஆனால் தற்போது கோபா அமெரிக்க தொடரின் கோப்பையை அவர் கையில் ஏந்தி முத்தம் கொடுக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் மெஸ்ஸியை சக வீரர்கள் தூக்கி கொண்டாடும் புகைப்படமும் இணையத்தில் #Messi என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நட்பு

இதுமட்டுமல்லாமல் எதிரணி வீரர் நெய்மருக்கு, மெஸ்ஸி ஆறுதல் கூறும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இறுதிப்போட்டியில் தோல்வியை பெற்றவுடன் பிரேசில் கேப்டன் நெய்மார் மைதானத்திலேயே மனம் உருகி அழுதார். அப்போது அவரை மெஸ்ஸி ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். மெஸ்ஸி கோப்பையை வென்று கொடுத்ததை விட சக அணி கேப்டனுக்கு ஆறுதல் தெரிவித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி 6 போட்டிகளில் விளையாடிய 4 கோல்கள் அடித்து, 5 கோல் அசிஸ்ட்கள் செய்திருந்தார். அதேப்போல பிரேசிலின் நெய்மர் இரண்டு கோல்கள், மூன்று கோல் அசிஸ்ட்கள் செய்திருந்தார். இருவருமே இந்த ஆண்டு கோபா அமெரிக்காவின் சிறந்த வீரர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

Story first published: Sunday, July 11, 2021, 22:11 [IST]
Other articles published on Jul 11, 2021
English summary
Lionel Messi Hugs his old friend Neymar after the Copa America glory, Picture goes viral
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X