For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கோபா அமெரிக்கா... நனவாகுமா அர்ஜென்டினாவின் 20 வருஷத்துக் கனவு?

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவுக்கு கடந்த 20 வருடமாக நிறைவேறாமல் உள்ளது கோபா அமெரிக்கா கோப்பைக் கனவு. ஒவ்வொரு முறையும் அது கனவு கண்டு வந்தபோதும் இதுவரை கைக்கு எட்டாமலேயே உள்ளது. ஆனால் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கணிப்புகள் எல்லாம் எப்போதும் நிறைவேறி விடுவதில்லை. பல அணிகள் இதை வெல்லும், அதை வெல்லும் என்று கணிக்கப்பட்டபோதும் எதிர்பாராத அணிகளே வெற்றி பெற்றது கடந்த கால உதாரணங்களாக உள்ளன. ஆனால் அர்ஜென்டினா நிச்சயம் இந்த முறை வெல்லும் என்று பலரும் திடமாக நம்புகின்றனர்.

இருப்பினும் கடந்த 20 வருடமாக இந்தக் கோப்பைக்காக தவம் இருந்து வரும் அர்ஜென்டினாவுக்கு நிச்சயம் இந்த முறை வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் அசைக்க முடியாததாக உள்ளது. காரணம், மெஸ்ஸி மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

நூறு வருஷத்துத் தொடர்

நூறு வருஷத்துத் தொடர்

இந்த வருடத்து கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடர் நூற்றாண்டு தொடராகும். எனவே இதற்கு விசேஷ எதிர்பார்ப்பு அதிகரி்த்துள்ளது. அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அமெரிக்காவில் இன்று இந்த கால்பந்துத் தொடர் தொடங்குகிறது. இதில் அர்ஜென்டினாவுக்கு கோப்பையை வெல்ல சான்ஸ் உள்ளதாக பலரும் கணித்துள்ளனர்.

வறட்சியில் அர்ஜென்டினா

வறட்சியில் அர்ஜென்டினா

அர்ஜென்டினா அணி சமீப காலத்தில் பெரிய கோப்பை எதையும் வென்றதில்லை. 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் ஆனது. அதன் பின்னர் 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அவ்வளவுதான்.

1993க்குப் பிறகு

1993க்குப் பிறகு

1993ம் ஆண்டு ஈகுவடாரில் நடந்த கோபா அமெரிக்கா போட்டியில் சாம்பியன் ஆனது அர்ஜென்டினா. அதன் பிறகு அதற்கு சாம்பியன் கோப்பை கனவாகவே இருந்து வருகிறது.

ராசியில்லாத மெஸ்ஸி

ராசியில்லாத மெஸ்ஸி

மெஸ்ஸிக்கு ஒரு கெட்ட பெயர் உண்டு. சாதா போட்டிகளில் எல்லாம் கலக்குவார். ஆனால் முக்கியமான போட்டிகளில் கோப்பையை பெற்றுக் கொடுக்கத் தவறி விடுவார் என்று அவருக்கு பெயர் உண்டு. அதுவும் உண்மைதான்.

மெஸ்ஸியால் முடியாதது

மெஸ்ஸியால் முடியாதது

2014 உலகக் கோப்பைப் போட்டியிலும் சரி, 2015ல் சிலியில் நடந்த கோபா அமெரிக்காப் போட்டியிலும் சரி மெஸ்ஸி மேஜிக் அர்ஜென்டினாவுக்குப் பலன் தரவில்லை. கோப்பைகளையும் பெற்றுத் தரவில்லை. இந்த இரண்டிலுமே இறுதிப் போட்டி வரை முன்னேறித் தோற்றது அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்ப கிடைக்கும் பாஸ்

இப்ப கிடைக்கும் பாஸ்

ஆனால் ஜெரார்டோ மார்ட்டினோவை பயிற்சியாளராகக் கொண்ட தற்போதைய அர்ஜென்டினா அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று பலரும் அடித்துக் கூறுகிறார்கள்.

நூற்றாண்டு விழா

நூற்றாண்டு விழா

1916ம் ஆம்டு முதலாவது கோபா அமெரிக்காப் போட்டித் தொடர் நடந்தது. இந்த வருடம் அப்போட்டித் தொடருக்கு நூற்றாண்டு விழாவாகும். முன்பு இது தென் அமெரிக்க கால்பந்து சாம்பியன் போட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது கோபா அமெரிக்கா என்றானது.

அசைக்க முடியாத உருகுவே

அசைக்க முடியாத உருகுவே

கால்பந்து உலகில் பெரிய ஜாம்பவானான உருகுவே அணிதான் அதிக கோப்பைகளை வென்றுள்ளது. அதாவது 15 முறை இது சாம்பியனாகியுள்ளது. நடப்புச் சாம்பியன் சிலி. ஈகுவடார், வெனிசூலா ஆகிய நாடுகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகள் ஆகும்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

2016ம் ஆண்டுக்கான கோபா அமெரிக்கா போட்டிகள் இந்த முறை அமெரிக்காவில் நடைபெறுகின்றன. இன்று தொடங்கி 26ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

16 அணிகள்

16 அணிகள்

மொத்தம் 16 அணிகள் களத்தில் உள்ளன. இதில் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியனைச் சேர்ந்த அணிகள் 6 ( அமெரிக்கா, மெக்சிகோ, கோஸ்டாரிகா, ஜமைக்கா, ஹெய்தி, பனாமா) ஆகும். தென் அமெரிக்காவைச் சேர்ந்த அணிகள் 10 ஆகும்.

Story first published: Friday, June 3, 2016, 11:00 [IST]
Other articles published on Jun 3, 2016
English summary
The Centennial Copa America 2016, which will start on Friday in the US, will be a new opportunity for Argentina's national soccer team to break their dry spell of over 20 years without a title.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X