For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸி நீங்க போகக் கூடாது.. மாரடோனா வேண்டுகோள்

பியூனஸ் அயர்ஸ்: லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணியை விட்டு விலகக் கூடாது. அவரது ஓய்வை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.

கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத மெஸ்ஸி, கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அர்ஜென்டினா அணியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இது அர்ஜென்டினாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மெஸ்ஸி போகக் கூடாது என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மாரடோனாவும் அதே கோரிக்கையை வைத்துள்ளார்.

மெஸ்ஸி போகக் கூடாது

மெஸ்ஸி போகக் கூடாது

இதுகுறித்து மாரடோனா கூறுகையில், மெஸ்ஸி போகக் கூடாது. அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவரிடம் இன்னும் நல்ல ஆட்டத் திறன் உள்ளது.

ரஷ்யாவில் ஆடுவார்

ரஷ்யாவில் ஆடுவார்

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நிச்சயம் மெஸ்ஸி கலந்து கொள்ள வேண்டும். ஒரு சாம்பியன் போல அவர் ஆடுவதை நாங்கள் பார்க்க வேண்டும் என்றார் மாரடோனா.

சிலியுடன் தோல்வி

சிலியுடன் தோல்வி

சிலியுடன் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட் அவுட்டில் எதிர்பாராதவிதமாக தோல்வியுற்றது. இது அர்ஜென்டினா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. இதன் காரணமாக மெஸ்ஸி ஓய்வை அறிவித்தார்.

அர்ஜென்டினாவுக்கு ராசியில்லாதவர்

அர்ஜென்டினாவுக்கு ராசியில்லாதவர்

மெஸ்ஸி என்னதான் திறமையான வீரராக உலக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் கூட அர்ஜென்டினாவுக்கு அவர் ராசியில்லாதவராகவே இருக்கிறார். அவரால் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை உள்பட நான்கு முக்கிய சர்வதேச போட்டிகளின் பைனல்ஸில் வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 28, 2016, 17:10 [IST]
Other articles published on Jun 28, 2016
English summary
Argentine football legend Diego Maradona urged Lionel Messi not to follow through on his vow to quit the national team after its defeat in the Copa America Centenario. "Messi has to stay in the national team. He has to stay because he still has playing days ahead of him," Maradona was quoted as saying by La Nacion newspaper online.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X