For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

யூரோ கோப்பை நினைவுகள்.. ரசிகர்களின் இனவெறி தாக்குதல்.. ட்ரோல்களுக்கு ராஷ்போர்ட் கொடுத்த பதிலடி!

தோஹா: இங்கிலாந்து ரசிகர்களின் இனவெறி தாக்குதல்களை கடந்து, ராஷ்போர்ட் மற்றும் சாகா ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, செனகல், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ளன.

இதில் இங்கிலாந்து அணி ஈரான் அணியை 6-2 என்ற கோல் கணக்கிலும், அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தும், வேல்ஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றும் தோல்வியின்றி முன்னேறியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணி படுதோல்விக்கு 4 முக்கிய காரணம்.. மெகா சொதப்பல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணி படுதோல்விக்கு 4 முக்கிய காரணம்.. மெகா சொதப்பல்

யூரோ தொல்வி

யூரோ தொல்வி

இந்த 3 போட்டிகளிலும் சேர்த்து இங்கிலாந்து அணி மொத்தமாக 9 கோல்களை அடித்துள்ளது. அதில் 7 கோல்களை கறுப்பின வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளது. கறுப்பின வீரர்கள் என்று குறிப்பிடுவதற்கான காரணம், சரியான ஒரு ஆண்டுக்கு முன் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலி அணியிடம் பெனால்டி முறையில் தோல்வியை சந்தித்தது.

இனவெறி தாக்குதல்

இனவெறி தாக்குதல்

இங்கிலாந்து அணிக்காக பெனால்டியை அடித்த ராஷ்போர்ட், புகாயா சாகா, ஜோசன் சான்சோ ஆகியோரால் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து ரசிகர்கள் இவர்கள் மூவரையும் குறிவைத்து இன ரீதியாக விமர்சிக்க தொடங்கினர். சமூக வலைதளங்கள், மைதானங்கள், பொதுவெளிகள் என எங்கு பார்த்தாலும், மூவரையும் ரசிகர்கள் இன ரீதியில் விமர்சிப்பது தீவிரமடைந்தது.

சாகா பதிவு

சாகா பதிவு

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சாகா தனது சமூக வலைதள பக்கத்தில், இன ரீதியாக பதிவிடப்படும் தாக்குதல்கள், என்னை பாதிக்க விடமாட்டேன். நான், மார்கஸ் ராஷ்போர்ட், ஜோடன் ஆகியோர் மீதான வெறுக்கத்தக்க விமர்சனங்களை வேறு எந்த இளைஞரும், குழந்தையும் பெறுவதை விரும்பவில்லை என்று பதிவிட்டார்.

மீண்டு வந்த ராஷ்போர்ட்

மீண்டு வந்த ராஷ்போர்ட்

இந்த நிலையில் ரசிகர்களின் இனவெறி தாக்குதல்களை கடந்து உலகக்கோப்பைத் தொடரில் மீண்டும் சாகா மற்றும் ராஷ்போர்ட் ஆகியோர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இங்கிலாந்து அணி செனகல் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், காலிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 1, 2022, 1:11 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
Having overcome racist attacks from England fans, Rashford and Saka have bounced back and are doing well in the World Cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X