For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸியின் ஜெர்சி கேட்டு அடம்பிடித்த ஆப்கன் சிறுவன் !

By Karthikeyan

காபூல்: ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவன் கால்பந்தாட்ட ஜாம்பவான் லயனல் மெஸ்ஸியின் ஜெர்சி அணிந்து உற்சாகமாக கால்பந்தாடி வரும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக ஆகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே ஜகோரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மொர்டஷா அகமதி. சிறு வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்ட அவன் மெஸ்ஸியின் ஆட்டங்களை டிவியில் பார்த்து ரசித்துள்ளான். அதுவே மெஸ்ஸியின் தீவிர ரசிகனாக மாற்றியுள்ளது.

Messi seeks to meet Afghan boy in plastic jersey

ஒருநாள் வழக்கம் போல டிவியில் மெஸ்ஸியை பார்த்த அவன், மெஸ்ஸி அணிந்து விளையாடும் ஜெர்சி வேண்டும் என்று முரண்டு பிடித்துள்ளான். ஆனால், மெஸ்ஸியின் ஜெர்சியை வாங்கிக் கொடுக்க பணமில்லாத அவனது தந்தை, பெரிய பிளாஸ்டிக் பையில் மெஸ்ஸி - 10 என வரைந்து கொடுத்துள்ளார். சிறுவன் அகமதி அந்த பிளாஸ்டிக் ஜெர்சியை அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வைரலாக பரவியது.

இதற்கிடையே மெஸ்சியின் பி.ஆர். நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அந்த சிறுவனை தேடி ஆப்கானிஸ்தான் சென்று பார்த்தனர். அப்போது லயனல் மெஸ்சியின் சார்பில் சிறப்பு பரிசாக சிறுவன் அகமதிக்கு, பார்சிலோனாவின் மெஸ்சி ஜெர்சி வழங்கியுள்ளனர்.

இதுவரை காற்றே இல்லாத பந்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த அகமதிக்கு புதிய கால்பந்துகளும் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து காபூல் நகரில் உள்ள மைதானத்தில், சிறுவன் அகமதி பார்சிலோனாவின் மெஸ்சி ஜெர்சி அணிந்து விளையாடினான்.

தற்போது இந்த படங்களும் இணையங்களில் வைரல் ஆகியுள்ளதால் விரைவில் லயனல் மெஸ்சி, சிறுவன் அகமதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, February 3, 2016, 23:17 [IST]
Other articles published on Feb 3, 2016
English summary
Messi will be meet young Afghan fan for shirt made in plastic bag
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X