For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எதிர்பாராத திருப்பம்... மோஹுன் பகன் அணியை வீழ்த்தி வின்னர்ஸ் ஷீல்டை கைப்பற்றிய மும்பை சிட்டி!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 110வது மற்றும் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல் இரண்டு இடங்களில் வலிமையாக இருந்த ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இதில் எதிர்பாராத திருப்பமாக 2க்கு 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்சி அணி வெற்றி பெற்று ஐஎஸ்எல் லீக் வின்னர்ஸ் ஷீல்டை கைப்பற்றியுள்ளது.

110வது போட்டி

110வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 110வது மற்றும் லீக் போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடரின் முதல் இரண்டு இடங்களில் வலிமையாக இருந்த ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின.

மும்பை சிட்டி வெற்றி

மும்பை சிட்டி வெற்றி

முதல் இடத்தை பிடிக்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆயினும் இந்த போட்டியில் 2க்கு 0 என்ற கணக்கில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து ஐஎஸ்எல் லீக் வின்னர்ஸ் ஷீல்டை கைப்பற்றியுள்ளது. மேலும் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்கின் குரூப் ஸ்டேஜிலும் இடம்பெற்றுள்ளது.

அடுத்தடுத்த கோல்கள்

அடுத்தடுத்த கோல்கள்

இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் கோச் செர்ஜியோ லோபெரா தலைமையிலான மும்பை சிட்டி அணி சிறப்பாக பயன்படுத்தியது. 7வது மற்றும் 39வது நிமிடங்களில் அந்த அணியின் மோர்டடா பால் மற்றும் பார்த்தோலோமியோ ஆக்பெச் ஆகியோர் அடித்த கோல்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

சிறப்பான தடுப்பாட்டம்

சிறப்பான தடுப்பாட்டம்

மேலும் இரண்டாவது பகுதியிலும் மோஹுன் பகன் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை சிறப்பாக தடுத்து ஆடியது மும்பை சிட்டி. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மோஹுன் பகன் அணி தொடரை கைப்பற்றி ஐஎஸ்எல் தொடரில் தனது இரண்டாவது கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, March 1, 2021, 12:45 [IST]
Other articles published on Mar 1, 2021
English summary
Lobera’s side won comfortably in the end after first-half goals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X