ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 110வது போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் 3 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் காணப்படும் நிலையில் இன்றைய போட்டியின் வெற்றி மூலம் முதலிடத்திற்கு மும்பை சிட்டி எப்சி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கலாம்.

110வது போட்டி

110வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 110வது போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களில் வலிமையாக உள்ள ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. முதல் இடத்தை பிடிக்க மும்பை சிட்டி எப்சி அணி தீவிரமாக இந்த போட்டியில் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 புள்ளிகள் வித்தியாசம்

3 புள்ளிகள் வித்தியாசம்

இரு அணிகளுக்கும் இடையில் 3 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் காணப்படும் நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று முதலிடத்தை மீண்டும் பிடிக்க மும்பை சிட்டி எப்சி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலிடத்தை பிடிக்கும் அணி வின்னர்ஸ் கோப்பையை பெறும்.

ப்ளே-ஆப்பிற்கு முன்னேற்றம்

ப்ளே-ஆப்பிற்கு முன்னேற்றம்

இந்த தொடரின் இறுதி லீக் போட்டியான இந்த போட்டியில் வலிமையான இரு அணிகள் களமிறங்கி விளையாடுவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு அணிகளும் ஏற்கனவே ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

19 போட்டிகள்... 14 கோல்கள்

19 போட்டிகள்... 14 கோல்கள்

கடந்த ஒடிசா எப்சிக்கு எதிரான போட்டியில் மும்பை சிட்டி அணி 6க்கு 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஐதராபாத் எப்சிக்கு எதிரான கடந்த போட்டியில் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் மோஹுன் பகன் அணி டிரா செய்துள்ளது. மேலும் தொடரின் நாயகன் ராய் கிருஷ்ணா இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 14 கோல்களை அடித்துள்ள நிலையில் அவர்மீதும் ரசிகர்களின் பார்வை உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Roy Krishna, who has scored 14 goals in 19 fixtures played so far in the season
Story first published: Sunday, February 28, 2021, 21:38 [IST]
Other articles published on Feb 28, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X