முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் மும்பை சிட்டி எப்சி... பெங்களூருவுடன் மோதல்!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 95வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் மும்பை சிட்டி எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை சிட்டி எப்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியின் வெற்றி மூலம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும்.

95வது போட்டி

95வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 95வது போட்டி இன்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதில் மும்பை சிட்டி எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் புள்ளிகள் பட்டியலில் முறையே 2வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன.

வெற்றி பெறாத அணிகள்

வெற்றி பெறாத அணிகள்

இந்த இரு அணிகளும் கடந்த போட்டிகளில் வெற்றியை பெறவில்லை. கடந்த போட்டியில் எப்சி கோவாவுடன் மோதிய மும்பை சிட்டி 3க்கு 3 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்துள்ளது. இதேபோல பெங்களூரு எப்சி அணியும் கடந்த ஏடிகே மோஹுன் பகன் அணியுடனான போட்டியில் 0க்கு 2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டுள்ளது.

7வது இடத்தில் பெங்களூரு அணி

7வது இடத்தில் பெங்களூரு அணி

மேலும் இதுவரை விளையாடியுள்ள 16 போட்டிகளில் 34 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை சிட்டி அணி இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மும்பை சிட்டி தீவிரம்

மும்பை சிட்டி தீவிரம்

இந்த போட்டியில் வெல்வதன்மூலமே மும்பை சிட்டி எப்சி அணி மீண்டும் வெற்றிப் புள்ளிகளுடன் முதலிடத்திற்கு தாவ முடியும். இதையடுத்து அந்த அணி இந்த போட்டியை தீவிரமாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல பெங்களூரு அணியும் தனது ப்ளே-ஆப் கனவை துரத்தும்வகையில் இந்த போட்டியில் தீவிரமாக விளையாடும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai City FC will be locking horns with Bengaluru FC today
Story first published: Monday, February 15, 2021, 20:38 [IST]
Other articles published on Feb 15, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X