For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

புது நாள்... புது துவக்கம்... கண்டிப்பா வெற்றிதான்... நார்த்ஈஸ்ட் யுனைடெட் துணை கோச் உறுதி

கோவா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 56வது போட்டி திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டியில் கண்டிப்பாக நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி பெறும் என்று அணியின் துணை கோச் ஆலிசன் தெரிவித்துள்ளார்.

56வது போட்டி

56வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 56வது போட்டி இன்றைய தினம் கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன. 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள இந்த அணிகள் இன்றைய போட்டியில் மோதவுள்ள நிலையில் பரபரப்புக்கு குறைவில்லாமல் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

7வது இடத்தில் நார்த்ஈஸ்ட்

7வது இடத்தில் நார்த்ஈஸ்ட்

நார்த்ஈஸ்ட் யுனைடெட் மற்றும் பெங்களூரு இரு அணிகளும் இந்த தொடரில் மிகவும் வலிமையாகவே போட்டிகளின் துவக்கத்தில் விளையாடின. ஆனால் தொடர்ந்து 3 போட்டிகளில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி தோல்வியடைந்து 11 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

துணை கோச் உறுதி

துணை கோச் உறுதி

இதேபோல பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் தீவிரத்துடன் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளன. இந்நிலையில் தங்களது குறைகளை மட்டுமின்றி நிறைகளையும் கவனத்தில் கொண்டு இன்றைய போட்டியில் விளையாட உள்ளதாக நார்த்ஈஸ்ட் அணியின் துணை கோச் ஆலிசன் தெரிவித்துள்ளார்.

நார்த்ஈஸ்ட் கோச் நம்பிக்கை

நார்த்ஈஸ்ட் கோச் நம்பிக்கை

இன்றைய போட்டியில் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை அளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியின் தோல்வி குறித்து கவலை கொள்ளாமல் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி கொள்ள வேண்டும் என்று அணி வீரர்களுக்கு பெங்களூரு எப்சி அணியின் தற்காலிக கோச் நவுசத் மூசா அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Tuesday, January 12, 2021, 20:03 [IST]
Other articles published on Jan 12, 2021
English summary
The main thing is that we not only focus on the negatives but the positives also -assistant coach Alison
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X