For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்!

ரோம் : இத்தாலியின் யுவெண்டஸ் அணியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பாலோ டைபலா கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பின் அதில் இருந்து தப்பி உள்ளார்.

தற்போது மீண்டும் பயிற்சி செய்யத் துவங்கி இருக்கும் அவர் தன் மோசமான அந்த நாட்களை பற்றி கூறினார்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த போது தான் எப்படி உணர்ந்தேன் என அவர் கூறி உள்ளார்.

கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா!கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா!

இத்தாலியில்..

இத்தாலியில்..

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றாம் கட்டத்தை எட்டி மிக வேகமாக பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அங்கே அதிகமாக உள்ளது. துவக்கத்தில் இத்தாலியில் பலரும் கொரோனா வைரஸை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கால்பந்து போட்டிகள் நடந்தது

கால்பந்து போட்டிகள் நடந்தது

கால்பந்து வெறியர்கள் கொண்ட அந்த நாட்டில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட போது கூட கால்பந்து போட்டிகள் தடைபடவில்லை. மக்களும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றிக் கொண்டு இருந்தனர்.

சிக்கிய கால்பந்து வீரர்கள்

சிக்கிய கால்பந்து வீரர்கள்

அதன் விளைவாக அங்கே இதுவரை 86,000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இந்த நோய் கால்பந்து வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு கொரோனா வந்த உடன் தான் அங்கே கால்பந்து போட்டிகள் நிறுத்தப்பட்டது.

மூன்று வீரர்களுக்கு பாதிப்பு

மூன்று வீரர்களுக்கு பாதிப்பு

இத்தாலியின் சீரி - ஏ கால்பந்து தொடரின் பிரபல யுவெண்டஸ் அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் தான் பாலோ டைபலா. அதே அணியில் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கொரோனா அனுபவம்

கொரோனா அனுபவம்

பாலோ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு விட்டார். தன் கொரோனா அனுபவம் குறித்து மீண்டு வந்த பாலோ கூறினார். தான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதாகவும், கடும் தசை வலியில் இருந்ததாகவும் கூறி உள்ளார்.

கடுமையாக வலித்தன

கடுமையாக வலித்தன

"எனக்கு கடும் அறிகுறிகள் இருந்தன. ஆனால், இன்று நான் சிறப்பாக இருக்கிறேன். இப்போது என்னால் நகர முடிகிறது. நடக்க முடிகிறது. பயிற்சி செய்ய முடிகிறது. சில நாட்கள் முன்பு நான் இவற்றை செய்ய முயன்றேன். அப்போது நான் கடுமையாக மூச்சு விட சிரமப்பட்டேன். என் தசைகள் கடுமையாக வலித்தன" என கூறி உள்ளார் பாலோ.

வரும் முன் காப்போம்

வரும் முன் காப்போம்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் உலகம் முழுவதும் மீண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த பாதிப்பின் போது எப்படி இருக்கும் என்பதை தான் பாலோ கூறி உள்ளார். வரும் முன் காப்பதே நல்லது.

Story first published: Saturday, March 28, 2020, 18:17 [IST]
Other articles published on Mar 28, 2020
English summary
Paulo Dybala says he was struggling to breath when infected with coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X