For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

1000 கோல் அடித்த கால்பந்து நாயகன்.. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த உலக அதிசயம்!

சாண்டோஸ் : கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் பீலே 1000 கோல்கள் அடித்ததன் 50வது ஆண்டு கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கடந்த 1969ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தனது 1000மாவது கோலை தனக்கு விருப்பமான சாண்டோஸ் அணி சார்பில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பீலே அடித்தார்.

79 வயதாகும் பீலேவின் சாதனை தற்போது வரை உலகளவில் கால்பந்தாட்ட ரசிகர்களின் போற்றுதலுக்கு உள்ளாகி வருகிறது. அவர் தனது 1000மாவது கோலை அடித்தபோது 80 ஆயிரம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 கால்பந்தாட்ட ஜாம்பவான்

கால்பந்தாட்ட ஜாம்பவான்

கருப்பு முத்து என்று புகழப்படும் பீலே, மிக இளம் வயதிலேயே கால்பந்தாட்டம் ஆட வந்துவிட்டார். தன்னுடைய பல சாதனைகளை தானே முறியடித்து வெற்றி கண்டவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் இவர்.

 80,000 ரசிகர்கள் கொண்டாட்டம்

80,000 ரசிகர்கள் கொண்டாட்டம்

கடந்த 1969வது ஆண்டில் தனது 29வது வயதில் தன்னுடைய ஆயிரமாவது கோலை அடித்து வெற்றிக் கொடி நாட்டினார் பீலே. ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் அவர் தனது 1000 கோல்கள் என்ற சாதனையை நிறைவேற்றினார்.

 1956ல் முதல் களம்

1956ல் முதல் களம்

1956 செப்டம்பர் 7ம் தேதி சாண்டோஸ் அணிக்காக கொரிந்தியன்ஸ் அணியை எதிர்த்து தன்னுடைய முதல் களத்தை கண்டார் பீலே. அவருக்கு பிடித்தமான 10ம் எண் ஜெர்சி அவருடைய சாதனை காலத்தில் அவருடனேயே பயணித்தது.

 தேசிய சொத்து பீலே

தேசிய சொத்து பீலே

பிரேசில் அணிக்காக விளையாடி கடந்த 1958 மற்றும் 1962 ஆண்டுகளில் அந்த அணி உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் பீலே. இவரை பிரேசில் அரசு தங்கள் நாட்டின் தேசிய சொத்தாக அறிவித்தது.

 உலகத்தை உற்று பார்க்க செய்தவர்

உலகத்தை உற்று பார்க்க செய்தவர்

1958ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த பீலே, அரையிறுதிப் போட்டியில் பிரான்சுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து உலகமே தன்னை உற்று பார்க்க செய்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஹாட்ரிக் கோல்களை அடித்தவர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.

 1977ல் முற்றிலும் ஓய்வு

1977ல் முற்றிலும் ஓய்வு

கடந்த 1971ல் சர்வதேச கால்பந்தாட்டத்திற்கு விடை கொடுத்த பீலே, பிரேசில் அணிக்காக 92 சர்வதேச போட்டிகளில் களம்கண்டு 77 கோல்களை அடித்து சாதித்தார். இதேபோல 1977ல் கால்பந்தாட்டம் விளையாடுவதில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார்.

 1363 போட்டிகளில் 1281 கோல்கள்

1363 போட்டிகளில் 1281 கோல்கள்

பீலே அடித்துள்ள கோல்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ள போதிலும் அவர் தனது ஆட்டக்காலத்தில் 1363 போட்டிகளில் 1281 கோல்கள் அடித்ததே உண்மை நிலவரம் என்று கூறப்பட்டுள்ளது.

 ஏழை குழந்தைகளுக்காக உதவி

ஏழை குழந்தைகளுக்காக உதவி

தன்னுடைய ஆயிரமாவது கோலை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அடித்து உலக அளவில் புகழ்பெற்றாலும், தான் இந்த சாதனையை கொண்டாட விரும்பவில்லை என்று பீலே தெரிவித்தார். ஏழை குழந்தைகளின் நலனுக்காக தான் பணிபுரிய விரும்புவதாக தெரிவித்த அவர், அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

Story first published: Wednesday, November 20, 2019, 12:14 [IST]
Other articles published on Nov 20, 2019
English summary
Black pearl Pele's 1000th goal -fans celebs 50th Year
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X