For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஒவ்வொரு போட்டிக்கும் அணி வீரர்கள் வலிமையாகிட்டே இருக்கறாங்க... ஜாம்ஷெட்பூர் கோச் பாராட்டு

பனாஜி : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 38வது போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் அதில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் கோவா எப்சி அணிகள் மோதவுள்ளன.

ஷாம்ஷெட்பூர் அணி தொடர்ந்து ஆறு வெற்றிகளை பெற்று வலிமையாக உள்ள நிலையில் கோவா அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

47 பந்துகளில் 120 ரன்கள்... அர்ஜூன் டெண்டுல்கர் விக்கெட்... நெவர் எவர் கிவ்-அப் சூர்யகுமார்! 47 பந்துகளில் 120 ரன்கள்... அர்ஜூன் டெண்டுல்கர் விக்கெட்... நெவர் எவர் கிவ்-அப் சூர்யகுமார்!

இந்நிலையில் தன்னுடைய அணி வீரர்கள் போட்டிக்கு போட்டி வலிமையாகிக் கொண்டே செல்வதாக ஜாம்ஷெட்பூர் அணியின் கோச் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

38வது போட்டி

38வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 38வது போட்டி நாளை வாஸ்கோவின் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் கோவா எப்சி அணிகள் மோதவுள்ளன. இதுவரை முதல் போட்டியில் சென்னையின் எப்சி அணியுடன் மட்டும் தோற்றுள்ள ஜாம்ஷெட்பூர் அணி தொடர்ந்து ஆறு வெற்றிகளை பெற்றுள்ளது.

சிறப்பான வீரர்கள்... கோச் பாராட்டு

சிறப்பான வீரர்கள்... கோச் பாராட்டு

இந்நிலையில் இந்த அணியுடன் கடந்த இரு போட்டிகளில் சொதப்பியுள்ள கோவா எப்சி அணி நாளைய போட்டியில் மோதவுள்ளது. இந்நிலையில் தன்னுடைய அணி வீரர்களின் செயல்பாடு குறித்து ஜாம்ஷெட்பூர் அணியின் கோச் ஓவன் கோய்லே மகழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கோய்லே மகிழ்ச்சி

கோய்லே மகிழ்ச்சி

ஒவ்வொரு போட்டியிலும் அணி வீரர்களின் வலிமை கூடிக் கொண்டே இருப்பதாக ஓவன் மேலும் கூறினார். தங்களின் செயல்பாடு அதிகமாக உள்ள இடங்களில் வீரர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதை உணர்ந்து செயல்படும் வீரர்கள் கிடைத்தால் நல்ல பலனை அடையலாம் என்றும் அவர் கூறினார்.

6 கோல்கள் விளாசல்

6 கோல்கள் விளாசல்

இகோர் ஆங்குலா மற்றும் நெரிஜூஸ் வால்ஸ்கிஸ் இருவரும் தலா 6 கோல்களை அடித்துள்ளனர். தங்களது அணியின் 75 சதவகித கோல்களை இவர்கள் பூர்த்தி செய்துள்ளனர். மேலும் ஜாம்ஷெட்பூர் அணியின் ஐடோர் மான்ராயின் வருகை அந்த அணிக்கு மேலும் வலிமையை கூட்டியுள்ளது.

தற்போதைய போட்டியில் கவனம்

தற்போதைய போட்டியில் கவனம்

இந்நிலையில் கோவா அணியின் கோச் ஜூவான் பெராண்டோ கூறுகையில், கடந்து சென்ற போட்டிகளை பற்றி கவலைப்படாமல் தற்போது நடைபெறவுள்ள ஜாம்ஷெட்பூர் அணியுடனான போட்டியில் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 22, 2020, 19:34 [IST]
Other articles published on Dec 22, 2020
English summary
Our focus is on present and it's on Jamshedpur -Goa coach Juan Ferrando
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X