For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ரியோ ஒலிம்பிக்ஸ்: சாய்னா, ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா இன்று விளையாடப்போறாங்க

By Mayura Akilan

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இன்று நடைபெறும் ஒன்பது போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பாட்மிட்டன் பெண்கள் இரட்டையர் போட்டி முதல் சுற்றில் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. பாட்மிட்டன் பெண்கள் ஓற்றையர் போட்டி முதல் சுற்றில் சாய்னா நேவால் களமிறங்குகின்றார்.

என்னென்ன போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்

Rio Olympics 2016 : India's schedule in Brazil on August 11

குத்து சண்டை : ஆண்களுக்கான 64கிலோ போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் குமார் பங்கேற்கிறார். இந்த போட்டி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆண்களுக்கான கோல்ப் போட்டி: தனிநபர் ஆண்களுக்கான கோல்ப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனிருபன் லாஹிரி, எஸ்.எஸ்.பி.செளராஸியா ஆகியோர் தனித்தனியே பங்கேற்கிறார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

பாட்மிட்டன் போட்டிகள்: பாட்மிட்டன் பெண்கள் இரட்டையர் போட்டி முதல் சுற்றில் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

பாட்மிட்டன் ஆண்கள் இரட்டையர் போட்டி முதல் சுற்றில் மானு அத்ரி-சுமீத் ரெட்டிஆகியோர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

பாட்மிட்டன் பெண்கள் ஓற்றையர் போட்டி முதல் சுற்றில் பி.வி. சிந்து களமிறங்குகின்றார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்குகிறது.

பாட்மிட்டன் பெண்கள் ஓற்றையர் போட்டி முதல் சுற்றில் சாய்னா நேவால் களமிறங்குகின்றார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

ஹாக்கி : ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

குத்து சண்டை : ஆண்களுக்கான 56கிலோ போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிவா தப்பா பங்கேற்கிறார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Thursday, August 11, 2016, 15:31 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
Some of India's best athletes like shuttlers Saina Nehwal, PV Sindhu, Kidambi Srikanth along with boxer Shiva Thapa are going to be in action on the Thursday (Aug 11) to better country's medal prospects in the ongoing Rio Olympics 2016.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X