அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்

வாஸ்கோ : கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 59வது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இந்த தொடரில் 2வது முறையாக மோதவுள்ளன.

இரு அணிகளும் தலா 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

வேற லெவலில் தயாராகி இருக்கும் ஈஸ்ட் பெங்கால்.. கிலியில் மற்ற அணிகள்!

59வது போட்டி

59வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 59வது போட்டி கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் இந்த தொடரில் மோதும் இரண்டாவது போட்டி இது.

10 போட்டிகள்

10 போட்டிகள்

இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கோச் ராபி பௌலர் தலைமையிலான எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி, 10 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இதேபோல, 10 போட்டிகளில் விளையாடியுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

கடந்த 5 போட்டிகளில் தோல்வியை காணாத ஈஸ்ட் பெங்கால் அணி, கடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டுள்ளது. இதேபோல கடந்த போட்டியில் ஜாம்ஷெட்பூரை முறியடித்துள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இந்த போட்டியில் மோதவுள்ளது.

போட்டி டிரா

போட்டி டிரா

இந்த தொடரில் இரண்டாவது முறையாக மோதும் இந்த அணிகள் முதல் போட்டியில் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்துள்ளன. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ள இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Both sides have faced each other once before in a reverse fixture earlier this season
Story first published: Friday, January 15, 2021, 20:02 [IST]
Other articles published on Jan 15, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X