அனைவருக்கும் இலவச MGM டிக்கெட். ஆன்லைன் மூலம் கால்பந்து சேலஞ்ச்...வென்றால் தங்கப்பதக்கம் - விவரம்

சென்னை: ஆன்லைன் மூலம் கால்பந்து சேலஞ்ச், கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் இலவச MGM டிக்கெட் என அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தவிர்த்து பிற விளையாட்டு போட்டிகள் தடைபட்டுள்ளன.

சென்னை அணிக்காக களம் காணும் 3 முக்கிய வீரர்கள்....வலைபயிற்சியில் தீவிரம்... செம பலம் தான் - வீடியோ! சென்னை அணிக்காக களம் காணும் 3 முக்கிய வீரர்கள்....வலைபயிற்சியில் தீவிரம்... செம பலம் தான் - வீடியோ!

இந்நிலையில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அவர்களுக்காக ஆன்லைன் மூலம் விளையாட்டு போட்டி நடத்த சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த ஸ்போர்ட்டனா ( Sportena) அகாடமி திட்டமிட்டுள்ளது.

 ஜக்லிங் சேலஞ்ச்

ஜக்லிங் சேலஞ்ச்

கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்காக அதிக நேரம் ஜக்லிங் செய்யும் சேலஞ்ச் நடத்தப்படுகிறது. இதில் 3 வயது முதல் 18 வயது வரையிலான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்கலாம். இதற்காக 5 வயதுக்கு உட்பட்டோர், 8 வயதுக்கு உட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு உட்பட்டோர் என 6 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.

 வழிமுறைகள்

வழிமுறைகள்

இப்போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர், தங்களது ஜக்லிங் வீடியோ மற்றும் பிறந்த தேதிக்கான ஏதேனும் ஒரு ஆதாரத்தை 8778394729 என்ற எண்ணிற்கு வரும் ஏப்.14ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். மேலும் போட்டிக்கான நுழைவு கட்டணமாக ரூ.111 செலுத்த வேண்டும். இதனை 8778394729 எண்ணிற்கு கூகுள் பே செயலி மூலம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 9380869045, 8778394729 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ் அப் செய்யலாம்.

 போட்டிகான விதிமுறைகள்

போட்டிகான விதிமுறைகள்

ஜக்லிங் வீடியோவை அனுப்புவோர் அதனை எடிட் செய்து அனுப்பியது தெரியவந்தால் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி போட்டியில் இருந்து நீக்கப்படுவர். போட்டியில் நடுவர் எடுக்கும் முடிவே இறுதியானது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு வரும் ஏப்.18ம் தேதி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் பக்கங்களில் வெளியிடப்படும். அந்த 3 நபர்களுக்கும் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலவச டிக்கெட்

இலவச டிக்கெட்

அதே போல போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக வாட்ஸ் அப் மூலம் சான்றிதழும், MGM டிஸ்ஸி வேர்ல்ட்-க்கு செல்வதற்கான டிக்கெட்டும் இலவசமாக வழங்கப்படும் என அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்படவிருக்கும் இப்போட்டிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
கணிப்புகள்
VS
English summary
Sportena Academy organized Online Football Juggling Challenging Competition
Story first published: Wednesday, March 31, 2021, 11:47 [IST]
Other articles published on Mar 31, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X