For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கால்பந்து உலகின் சரித்திரம் சரிந்தது...17 ஆண்டுகள் களத்தில் சுழன்றடித்த மரடோனா புயல்!

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். இதனால் கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உலகம் முழுக்க கால்பந்து ரசிகர்கள் இவரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கால்பந்து உலகையே இவரின் மரணம் உலுக்கி உள்ளது.

மரடோனா மறைவு

மரடோனா மறைவு

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களாக மக்களை பயமுறுத்தி வந்த நிவர் புயல் நேற்று இரவு நள்ளிரவு கரையை கடந்தது. நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக பெருமளவில் சேதம் விளைவிக்காமல் சமத்தாக கரையை கடந்து விட்டது.இந்த நிவர் கரையை கடக்கும்போது இரவு 8 மணியளவில் சொல்லாமல் வந்த ஒரு சோக புயல் நம்மை தாக்கியது. கால்பந்து உலகின் ஜாம்பவான் டீகோ அர்மேண்டோ மரடோனா மறைவுதான் அது.

வாழ்க்கை பயணம்

வாழ்க்கை பயணம்

ஆம்... மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக இந்த உலகை விட்டு சென்றார். சாதனை மிக்க இந்த மனிதனின் வாழ்க்கை பயணத்தை பற்றி பார்ப்போம். 1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் பியூனஸ் அயர்சில் அக்டோபர் 30-ஆம் தேதி பிறந்த மரடோனாவின் வாழ்க்கையில் முதலில் ஏழ்மைதான் விளையாடியது.

பந்து எடுத்து போடும் பணி

பந்து எடுத்து போடும் பணி

8 குழந்தைகள் கொண்ட அவரது குடும்பம் வறுமையில் வாட்டியது. இந்த வறுமைக்கு மத்தியிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயது முதலே கால்பந்தின் மீது ஈர்ப்பு இருந்ததால் தனது 12 வயதில் பல்வேறு கால்பந்து டிவிஷன்களில் போட்டி நடக்கும் இடங்களில் பந்து எடுத்து போடும் பணியை செய்தார்.

முதல் அறிமுகம்

முதல் அறிமுகம்

போட்டி இடைவேளை நேரங்களில் பந்தை வைத்து அவர் செய்யும் பாணி பார்வையாளர்களை கவர்ந்தது. தனது பதினாறாவது வயதில் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முதன் முதலாக கால்பந்து உலகில் கால் பதித்தார்.அர்ஜெண்டினோஸ் ஜூனியர்ஸ் அணியுடன் முதல் அறிமுகத்தை தொடங்கினார்.

தேசிய அணியில் இடம்

தேசிய அணியில் இடம்

பதின்பருவ வயதிலேயே சக வீரர்களை விட தனித்துவமாக ஆடி அனைவரையும் கவர்ந்தார். அதன்பின்பு தனது திறமையால் படிப்படியாக முன்னேறி 1997-ல் தேசிய அணியில் இடம் பிடித்தார். 1982-ஆம் ஆண்டு முதன்முதலாக உலககோப்பையில் தடம் பதித்தாலும் 1986-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து அவருக்கு மிகவும் மறக்க முடியாதது.

உலகறிய செய்த ஆட்டம்

உலகறிய செய்த ஆட்டம்

இந்த போட்டி முழுவதும் மரடோனா ஆதிக்கம் செலுத்த்தும் வீரராக வளம் வந்தார். ஒவ்வொரு ஆட்டத்திழும் தனது திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில்தான் இவரது திறமை உலகறிய செய்தது. அந்த போட்டியில் 2 கோல்கள் அடித்து 2-1 என்ற கணக்கில் அணி வெற்றி பெற காரண கர்த்தாவாக விளங்கினார்.

கோப்பையை வென்றது

கோப்பையை வென்றது

பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணி பலமிக்க மேற்கு ஜெர்மனியை சந்தித்தது.அணியின் கேப்டனாக இருந்த மரடோனாவுக்கு கூடுதல் சுமை வந்து விழுந்தது.உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி மகுடம் சூடியது.

4 உலக்கோப்பை

4 உலக்கோப்பை

அர்ஜென்டினா கோப்பையை கைகளில் எந்த முக்கிய காரணமாக இருந்தவர் மரடோனாதான். இந்த தொடரில் இருந்து அர்ஜென்டினா மக்கள் மட்டுமின்றி, உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.தேசிய அணியில் 1982, 1986, 1990, 1994உலககோப்பையில் இடம் பெற்றுள்ளார். தனது மாயாஜால, நுணுக்கமான ஆட்டத்தால், பந்தை லாவகமாக கடத்தும் விதத்தில் அனைவரையும் கவர்ந்தவர். பிரேசில் கால்பந்து கடவுள் பீலேவுக்கு நிகராக மக்களால் போற்றப்பட்டவர் மரடோனா.

259 கோல்கள்

259 கோல்கள்

1977-1979 வரை அர்ஜென்டினா அணிக்காக 2௦ வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடும் போது 8 கோல்களை அடித்துள்ளார். சர்வதேச அணியில் 1997 முதல் 1994 வரை 91 ஆட்டத்தில் பங்கேற்று 34 கோல்களை அடித்து சாதித்துள்ளார்.இது தவிர நெப்போலி, பார்சிலோனா, செவில்லா உள்ளிட்ட பல்வேறு கிளப் அணிகளிலும் விளையாடியுள்ளார். 491கிளப் போட்டிகளில் விளையாடி 259 கோல்களை கம்பத்திற்குள் புகுத்தியுள்ளார்.

சர்சைகளின் நாயகன்

சர்சைகளின் நாயகன்

தனது ஓய்விற்கு பிறகு பல்வேறு கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். கால் தேர்ந்த ஆட்டத்தால் மக்களின் நாயகனாக விளங்கிய விளங்கிய மரடோனா சர்சைகளின் நாயகனாகவும் விளங்கினார். கால்பந்துக்கு அடிமையானதுபோல் போதைபழக்கத்திற்கும் அடிமையானார்.

உயிர் பிழைத்தார்.

உயிர் பிழைத்தார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதால் 1991-ல் நாப்போலி கிளப் அணியில் 15 மாதங்கள் நீக்கப்பட்டார். போதைபழக்கம் காரனமாக அவரால் பல்வேறு போட்டிகளில் விளையாட முடியவில்லை.போதைப்பழக்கம் காரணமாக 2000-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிசையில் சிகிசை பெற்று உயிர் பிழைத்தார். போதைபொருள் தாக்கத்தை நன்கு உணர்ந்ததால் அதனை நிறுத்தி விட்டதாக 2007-ல் கூறினார்.

இல்லற வாழ்க்கை கசப்பு

இல்லற வாழ்க்கை கசப்பு

விளையாட்டைசிறப்பாக இருந்ததுபோல் போல் மரடோனாவின் இல்லற வாழ்க்கையும் சிறப்பானதாக இல்லை.

1984-ல் கிளாடியா என்ற பெண்ணை திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின்னர் வெரோனிகா என்பவரை 2-ஆவதாக மனம் முடித்தார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பரபரப்புக்கு பஞ்சமில்லாத மாரோடனா , வாங்கிய விருதுகளுக்கும் பஞ்சமில்லை.கிளப் தொடரிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

சுயசரிதை புத்தகம்

சுயசரிதை புத்தகம்

யோ சோய் எல் டீகோ ,என்ற தனது சுயசரிதை புத்தகத்தை 2000 ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார்,லண்டனின் தி டயம்ஸ் நாளிதழ் 2010 ஆம் ஆண்டு சிறந்த பத்து உலகக் கோப்பை கால்பந்து வீரர்களில் மரடோனாவை தேர்வு செய்து கவுரவித்தது.

கால்பந்து விளையாட்டை பற்றி முழுமையாக அறிய முடியாதவர்கள் கூட, மரடோனாவை தெரிந்து வைத்திருப்பார்கள். அர்ஜென்டினா கால்பந்து அணியில் ஏன், உலக கால்பந்து அரங்கில் கோடி கட்டி பரந்த மரடோனாவின் இழப்பு கால்பந்து உலகுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் பெரிய இழப்பதுதான்.

Story first published: Thursday, November 26, 2020, 12:44 [IST]
Other articles published on Nov 26, 2020
English summary
Argentine soccer legend Maradona demise has saddened world football fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X