For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலகமே அழியப் போகுது.. இப்பப் போயி இப்படியா.. தாமஸ் முல்லரை வச்சு செய்யும் டிவிட்டராட்டிகள்

பான்: பேயர்ன் மூனிச் அணியில் தாமஸ் முல்லர் 2023ம் ஆண்டு வரை விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டிவிட்டரில் அவரை வச்சு செய்ய ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே மிரண்டு போய் உள்ளது. உலகம் அழிந்து விடுமோ என்ற ரேஞ்சுக்கு பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். காரணம் கொஞ்சமும் அடங்காமல் இந்த நோய் பரவி வருவதுதான்.

இந்த நிலையில் உலகிலேயே அதிகம் விளையாடப்படும் விளையாட்டான கால்பந்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. உலக அளவில் பிரபலமான கால்பந்து தொடர்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

நீங்களா முன்வந்து ரிடையர்ட் ஆயிருங்க.... அணிக்கு அதுதான் நல்லது... அறிவுறுத்திய ரமீஸ் ராஜாநீங்களா முன்வந்து ரிடையர்ட் ஆயிருங்க.... அணிக்கு அதுதான் நல்லது... அறிவுறுத்திய ரமீஸ் ராஜா

பயிற்சிகள் தொடங்கின

பயிற்சிகள் தொடங்கின

இந்த நிலையில் ஜெர்மனியில் சற்று நிம்மதிப் பெருமூச்சு கிளம்பியுள்ளது. அங்கு இதுவரை பயிற்சி பெறக் கூட தடைவிதிக்கப்பட்டிருந்த கால்பந்து அணிகளுக்கு தற்போது படிப்படியாக பயிற்சிக்கு அனுமதி தர ஆரம்பித்துள்ளனர். முதல் ஆளாக பேயர்ன் மூனிச் அணி தனது வீரர்களை குழு குழுவாக பிரித்து பயிற்சியில் இறக்கியுள்ளது.

வீரர்களைப் பிரித்து பயிற்சி

வீரர்களைப் பிரித்து பயிற்சி

மொத்தமாக வீரர்களை விடாமல், சின்னச் சின்ன குழுவாக பிரித்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியின்போது போதிய சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் கூட அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் கூட கடினமான இந்த நேரத்திலும் வீரர்களை சந்திக்க முடிந்ததே என்று அணியினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

காண்டிராக்ட் நீட்டிப்பு

காண்டிராக்ட் நீட்டிப்பு

இந்த நிலையில் தான் இந்த புதிய செய்தி வந்துள்ளது. அதாவது பேயர்ன் மூனிச் அணியில் தாமஸ் முல்லர் 2023ம் ஆண்டு வரை விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது காண்டிராக்ட்டை அதுவரை நீட்டித்துள்ளனராம். இது தாமஸ் முல்லரின் ரசிகர்களுக்கும், பேயர்ன் மூனிச் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால் இது எதிர் விளைவுகளையும் கிளப்பியுள்ளது.

உலகமே அழியப் போகுது.. இது வேறயா

கொரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டுள்ளது. உலகமே அழியப் போகுது. இந்த நேரத்தில் இந்த காண்டிராக்ட் நீட்டிப்பு அவசியமா என்று கேட்டு ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். இவர் எங்கு போய் விளையாடப் போகிறார்.. எப்படி விளையாடப் போகிறார் என்றும் டிவிட்டரில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Story first published: Tuesday, April 7, 2020, 17:31 [IST]
Other articles published on Apr 7, 2020
English summary
FC Bayern Munich has extended Thomas Muller contract till 2023
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X