இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு எதற்காக தடை..?? பல முறை வந்த எச்சரிக்கை.. முழு விவரம் இதோ!

சென்னை: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனமான ( ஃபிபா ), இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதித்துள்ளது.

Recommended Video

India அணியின் Top Order பற்றி Ricky Ponting கருத்து *Cricket

இந்திய கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்று ( ஆகஸ்ட் 8) காலை அதிர்ச்சி செய்தியுடன் தான் தொடங்கியது.

அதாவது, மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பைக்கு (AIFF) தடை விதிப்பதாக ஃபிபா அறிவித்தது.

காலையிலேயே அதிர்ச்சி செய்தி..இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை.. இனி இந்திய அணி பங்கேற்க முடியுமாகாலையிலேயே அதிர்ச்சி செய்தி..இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை.. இனி இந்திய அணி பங்கேற்க முடியுமா

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இந்த இடைக்கால தடையால் வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா மகளிர் உலக கோப்பை 2022 கால்பந்து போட்டிகள் ரத்தாவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எப்படி வந்தது, ஃபிபா இந்த அதிரடி முடிவை எடுக்க என்ன காரணம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தல் கடந்த 18 மாதங்களாக நடந்தப்படாமலேயே உள்ளது. எனவே இந்த அமைப்பை கலைக்க கடந்த மே 18ம் தேதி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தேர்தலை விரைந்து நடத்தவும், அமைப்பின் அரசியலமைப்பை திருத்துவதற்கும் முன்னாள் நீதிபதி ஏஆர் டேவ் தலைமையில்

மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

மே 23ம் தேதியன்று, FIFA-வை தொடர்பு கொண்ட AIFF முன்னாள் தலைவர் ப்ராவுல் பட்டேல், மூன்றாவது தரப்பின் தலையீடு இருப்பதால் AIFF-க்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மே 29ம் தேதியன்று, செய்தியாளர்களை சந்தித்த 3 பேர் கொண்ட கமிட்டி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் AIFF தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜூலை 15க்குள் அமைப்பின் சட்ட திருத்தங்கள் மாற்றப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஜூன் 11ம் தேதியன்று, இந்திய கால்பந்து அமைப்பின் தேர்தலை நடத்துவது குறித்து FIFA மற்றும் ஆசிய கால்பந்து சமேளனத்துடன் ஆலோசனை நடத்தினர்.

ஜூன் 22ம் தேதியன்று, நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கால்பந்து அமைப்பில் நீதிமன்றத்தின் தலையீடு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என FIFA மற்றும் ஆசிய கால்பந்து சமேளனம் கூறியது.

ஜூன் 23ம் தேதியன்று, இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ஜூலை 31ம் தேதிக்குள் புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும், செப்டம்பர் 15க்குள் தேர்தல் நடத்தவும் கெடு விதித்தது

ஜூலை 16ம் தேதியன்று, புதிய சட்டத்திருத்தங்களை 3 பேர் கொண்ட குழு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தனர். ஆனால் மாநில கூட்டமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஜூலை 26ம் தேதியன்று, இந்திய கால்பந்து அமைப்பில் 25 சதவீதம் அளவிற்கு வீரர்களுக்கான பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என FIFA அறிவுறுத்தியது. ஆனால் அது நடைபெறவில்லை.

ஆகஸ்ட் 5ம் தேதியன்று, 3 பேர் கொண்ட குழு சமர்பித்தபடியே தேர்தல் பணிகள் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 15ம் தேதியன்று, FIFAவின் அறிவுரையையும் ஏற்காமல், 3வது தரப்பின் தலையீடு தொடர்ந்து இந்திய கால்பந்து அமைப்பில் இருந்ததால், அதற்கு தடை விதித்தது.

விளைவுகள் என்னென்ன

விளைவுகள் என்னென்ன

தடை செய்யப்பட்டதால் இந்தியாவில் நடைபெறவிருந்த மகளிர் U17 உலகக்கோப்பை நடைபெறாது.

எந்தவொரு சர்வதேச தொடர்களிலும், சர்வதேச அணிகளுடனும் இந்திய அணி விளையாட முடியாது.

செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த AFC கோப்பை தொடரின் மண்டல அளவிலான அரையிறுதி போட்டியில் ATK மோகன் பகான் அணி விளையாடவிருந்தது. ஆனால் தற்போது அது சந்தேகம் தான்.

அடுத்த மாதம் சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் அணிகளுடன் நடைபெறவிருந்த கால்பந்து தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Timeline of FIFA suspension on AIFF ( இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை ) இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு, ஃபிபா தடைவிதித்ததற்காக முழுமையான காரணத்தை பார்க்கலாம்.
Story first published: Tuesday, August 16, 2022, 17:43 [IST]
Other articles published on Aug 16, 2022

Latest Videos

  + More
  + மேலும்
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X