For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

2026 ஃபிபா உலகக் கோப்பை.... அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்க உள்ளது!

2026ல் நடக்க உள்ள ஃபிபா உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் துவங்க உள்ள நிலையில், 23வது உலகக் கோப்பையை நடத்தும் உரிமை அமெரிக்கா, கனடா, மெக்சிகோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கிறது. அடுத்து உலகக் கோப்பை 2022ல் கத்தாரில் நடக்க உள்ளது. இந்த நிலையில் 2026ல் நடக்க உள்ள உலகக் கோப்பையை யார் நடத்துவது என்பதை தேர்வு செய்வதற்கான கூட்டம் ரஷ்யாவில் நடந்தது. இதில் ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள 207 நாடுகள் வாக்களித்தனர்.

Voting started to select the 2026 fifa world cup host.

2026 உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு வடஅமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை இணைந்து மனு கொடுத்தன. அதே நேரத்தில் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவும் போட்டியை நடத்துவதற்கு அனுமதி கோரியது.

இதற்கு முன், ஃபிபாவில் உள்ள 24 செயற்குழு உறுப்பினர்களே, போட்டியை நடத்தும் நாடு குறித்த முடிவை எடுத்து வந்தன. ஆனால் கத்தாருக்கு 2022ல் நடத்த அனுமதி அளித்ததில் ஊழல் நடந்ததாக ஃபிபா தலைவராக இருந்த செப் பிளாட்டர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதனால் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதையடுத்து, ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இணைந்து, போட்டியை நடத்தும் நாட்டை தேர்ந்தெடுப்பது என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 2026ல் உலகக் கோப்பையை நடத்தும் நாடு குறித்து முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடந்தது.

தற்போது ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. 2026ல் நடக்க உள்ள உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதற்கேற்ற மைதான வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன.

துவக்கம் முதலே வடஅமெரிக்காவே முன்னிலையில் இருந்தது. இன்று நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து 2026 உலகக் கோப்பையை நடத்துவதற்கு 134 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மொராக்கோவுக்கு 65 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இதற்கு முன் 1970 மற்றும் 1986ல் வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உலகக் கோப்பை நடந்துள்ளது. அமெரிக்காவில் 1994ல் நடந்துள்ளது.

இதற்கு முன் நடந்த உலகக் கோப்பைகளை நடத்திய நாடுகள்:


1930 - உருகுவே
1934 - இத்தாலி
1938 - பிரான்ஸ்
1942 - உலகப் போரால் ரத்து
1946 - உலகப் போரால் ரத்து
1950 - பிரேசில்
1954 - சுவிட்சர்லாந்து
1958 - ஸ்வீடன்
1962 - சிலி
1966 - இங்கிலாந்து
1970 - மெக்சிகோ
1974 - மேற்கு ஜெர்மனி
1978 - அர்ஜென்டீனா
1982 - ஸ்பெயின்
1986 - மெக்சிகோ
1990 - இத்தாலி
1994 - அமெரிக்கா
1998 - பிரான்ஸ்
2002 - தென்கொரியா-ஜப்பான்
2006 - ஜெர்மனி
2010 - தென்னாப்பிரிக்கா
2014 - பிரேசில்
2018 - ரஷ்யா
2022 - கத்தார்

Story first published: Wednesday, June 13, 2018, 17:28 [IST]
Other articles published on Jun 13, 2018
English summary
Voting started to select the 2026 fifa world cup host.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X