For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வெற்றிக்கான எந்த நெருக்கடியும் எங்களுக்கு இல்ல... ஈஸ்ட் பெங்கால் கோச் பௌலர் பளீர்!

பனாஜி, கோவா : கோவாவில் ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறவுள்ள 23வது போட்டியில், எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்த தொடரில் இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளிலும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலிலும் இறுதி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வெற்றிக்கான எந்த நெருக்கடியும் தங்களுக்கு இல்லை என்றும் தாங்கள் சிறப்பான ஆட்டத்தை தந்து வருவதாகவும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியின் கோச் ராபி பௌலர் கூறியுள்ளார்.

இன்று 23வது போட்டி

இன்று 23வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி இதுவரை 22 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய 23வது போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதவுள்ளன. இந்த தொடரில் இதுவரை மோதிய 3 போட்டிகளிலும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி தோல்வியடைந்துள்ளது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்நிலையில் வெற்றிக்கான எந்த நெருக்கடியும் தங்களுக்கு இல்லை என்றும் தாங்கள் கோல்களை அடிக்கவில்லை என்றாலும் சிறப்பான ஆட்டங்களை ஆடி வருவதாகவும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியின் கோச் ராபி பௌலர் தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் வெற்றியை பெறுவது தங்களது அணிக்கு முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர் முயற்சி

தொடர் முயற்சி

ஆனால் வெற்றி என்பது ஒரு இரவில் வந்துவிடாது என்றும் தனக்கும் தன்னுடைய அணி வீரர்களுக்கும் வெற்றிக்கான எந்தவித நெருக்கடியும் இல்லை என்றும் பௌலர் மேலும் கூறினார். தாங்கள் வெற்றிக்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் கண்டிப்பாக வெற்றி வசப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாசிட்டிவ் எனர்ஜி வேண்டும்

பாசிட்டிவ் எனர்ஜி வேண்டும்

பௌலர் தலைமையிலான ஈஸ்ட் பெங்கால் அணியின் செயல்பாடு குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர்கள் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், தற்போதைக்கு அணி வீரர்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி மட்டுமே தேவை என்றும் அதை முன்னாள் வீரர்கள் அளிக்க வேண்டும் என்றும் பௌலர் கேட்டுக் கொண்ள்ளார்.

Story first published: Thursday, December 10, 2020, 16:06 [IST]
Other articles published on Dec 10, 2020
English summary
The more people get behind, the better they will be -Fowler
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X