For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா?

லண்டன் : கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே செய்வதறியாது முடங்கிப் போய் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இளவரசர், பிரதமர் என மேல் வட்டத்தை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆடும் அணிகளின் வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட ஒரு அணி தொடர்ந்து பயற்சியில் ஈடுபட்டு தொடருக்கு தயாராகப் போவதாக கூறி உள்ளது.

அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்!அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்!

ஐரோப்பா பாதிப்பு

ஐரோப்பா பாதிப்பு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கண்டம் ஐரோப்பா தான். அமெரிக்கா நாட்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து மெத்தனம்

இங்கிலாந்து மெத்தனம்

மற்ற நாடுகள் கடும் விதிமுறைகளை அமல்படுத்திய நிலையில், இங்கிலாந்து நாட்டில் மட்டும் துவக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அதன் விளைவாக கொரோனா வைரஸ் அங்கே வேகமாக பரவியது.

லாக்டவுன் அறிவிப்பு

லாக்டவுன் அறிவிப்பு

அந்த நேரத்தில் கால்பந்து போட்டிகள் அங்கே தொடர்ந்து நடைபெற்றது. பிரீமியர் லீக் தொடரும் நடைபெற்றது. பின்னர் இங்கிலாந்தில் கொரோனா வேகம் எடுத்த பின் தாக்கத்தை உணர்ந்த அந்த அரசு, ஏப்ரல் 13 வரை லாக்டவுன் அறிவித்தது.

பிரீமியர் லீக் பாதிப்பு

பிரீமியர் லீக் பாதிப்பு

அதன் பின் தான் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பல அணிகளின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆர்சினல், செல்சியா, லெய்செஸ்டர் உள்ளிட்ட அணிகளில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

வெஸ்ட் ஹாம் அணி

வெஸ்ட் ஹாம் அணி

இந்த நிலையில், வெஸ்ட் ஹாம் அணியை சேர்ந்த எட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், பேசிய அந்த அணியின் துணை தலைவர் கேரன் பிராடி அந்த வீரர்களின் அறிகுறிகள் குறைவாக இருப்பதாக கூறி உள்ளார்.

வீட்டில் பயிற்சி

வீட்டில் பயிற்சி

மேலும், தங்கள் வீரர்கள் வீட்டில் பயிற்சி செய்து வருவதாகவும், விரைவில் லாக்டவுன் முடிந்த உடன் வழக்கமான பயிற்சிகள் துவங்கும் என்றும் ஏப்ரல் 30க்கு பின் போட்டிகள் துவங்கும் எனவும், அதற்கு தயாராகப் போகிறோம் என்றும் கூறி உள்ளார்.

கால்பந்து அவசியமா?

கால்பந்து அவசியமா?

பிரீமியர் லீக் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என கூறினாலும், வெஸ்ட் ஹாம் அணி தொடருக்கு தயார் ஆவதில் குறியாக உள்ளது அதிர்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கால்பந்து அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, March 28, 2020, 19:50 [IST]
Other articles published on Mar 28, 2020
English summary
West Ham has 8 players with coronavirus symptoms, but still they looking forward to resume regular practice sessions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X