உலகக்கோப்பை கால்பந்து: கிரிஸ்டியானோ ரொனால்டோ காயத்திற்கு காரணம் மந்திரவாதியா?

ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து ஜூரம் ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது. நள்ளிரவு முதல் கால்பந்து போட்டிகளை நேரடியாகவும், தொலைக்காட்சி மூலமும் ரசித்து வருகின்றர்.

அதேசமயம் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

அதே சமயம் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்ததற்கு தனது மந்திரமே காரணம் என்று கானா நாட்டைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறார்.

'நானா க்வாகு போன்சாம்' என்ற இந்த நபர் தன்னைத்தானே மந்திரவாதி என்று அழைத்துக் கொள்கிறார். இவரது பெயருக்கு 'Devil of Wednesday' என்று அர்த்தமாம்.

இவர் போர்ச்சுக்கல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் காயம் உண்டாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததாக ஏஞ்செல் எஃப்.எம். ரேடியோவுக்கு பேட்டியளிக்கும் போது தெரிவித்தார்.

தன்னைத்தானே மந்திரவாதி என அழைத்துக்கொள்ளும் அந்த நபர் மேலும் கூறியதாவது:

ஆவியின் ஏவுதல்

ஆவியின் ஏவுதல்

"நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது மந்திர சக்திகளை ஏவி விட்டேன், நான் இதில் மிகவும் உண்மையாக ஈடுபட்டேன், கடந்த வாரம் 4 நாய்களைத் தேடினேன், அதன் மூலம் ஒரு ஆவியை உருவாக்கினேன்.

அவரால் இந்தக் காயங்களிலிருந்து மீள முடியாது ஏனெனில் இது உடல் ரீதியானது அல்ல மந்திரத்தால் விளைந்தது.

விளையாட முடியாது

விளையாட முடியாது

நான் 4 மாதங்களுக்கு முன்பே கூறினேன், ரொனால்டோவை நான் கண்காணித்து வருகிறேன் என்று, உலகக்கோப்பை போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

கானா அணிக்கு எதிராக

கானா அணிக்கு எதிராக

கானா அணிக்கு எதிராக கிரிஸ்டினா ரொனால்டோ விளையாடக்கூடாது என்று நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். இன்று அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, நாளை தொடையில் ஏற்படும், மறுநாள் வேறு ஒரு இடத்தில் என்று காயம் மேலும் மேலும் வலுக்கும்" இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஜூன் 26ல் விளையாடுவாரா ரொனால்டோ

ஜூன் 26ல் விளையாடுவாரா ரொனால்டோ

பிரிவு ஜி-யில் உள்ள கானா, போர்ச்சுக்கல் அணிகள் ஜூன் 26ஆம் தேதி மோதுகிறது. அன்றைய தினம் கிரிஸ்டினா ரொனால்டோ விளையாடுவாரா? அவருடைய காயம் சரியாகிவிடுமா? அல்லது மந்திரவாதி கூறியதுதான் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
World Cup is here again and already Cristiano Ronaldo is alleged to have been placed under injury spell by Ghana’s popular witch doctor, Nana Kwaku Bonsam to rid the Black Stars of Ghana from his world acclaimed skills in soccer. Will black magic be able to haul African teams far enough to bring the Cup to Africa or its just a fallacy? Hmm… we shall soon know what seasoned analyst thinks of this debate.
Story first published: Friday, June 13, 2014, 12:02 [IST]
Other articles published on Jun 13, 2014
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more