For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எதிர்பார்க்காத அதிர்ச்சி தந்த 2020.. இரண்டிலும் மண்ணை கவ்விய சென்னை அணி.. இனியும் மீண்டு வருமா?

சென்னை: 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி ஆடியதோ அதேபோன்ற சிக்கலை தற்போது ஐஎஸ்எல் 2020 தொடரில் சென்னையின் எப்சி அணி எதிர்கொண்டு வருகிறது.

ஐ.எஸ்.எல் 2020 கால்பந்து தொடர் இந்த முறை கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் மோதும் தொடர் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

ஐ.எஸ்.எல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயை எட்டியுள்ளது. இந்த தொடரை சென்னையின் எப்சி அணி வெற்றியோடுதான் எதிர்கொண்டது.

நேரடியாக கோலியிடம் சென்று.. மன்னிப்பு கேட்ட ரஹானே.. எதுவும் சொல்லாத கேப்டன்.. என்ன நடந்தது?நேரடியாக கோலியிடம் சென்று.. மன்னிப்பு கேட்ட ரஹானே.. எதுவும் சொல்லாத கேப்டன்.. என்ன நடந்தது?

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியோடுதான் தொடரை தொடங்கியது. ஆனால் அதன்பின் சென்னை அணியால் வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. வரிசையாக டிரா, தோல்வி என்று சென்னை அணி இரண்டாவது வெற்றியை பெற படாதபாடு பட்டுவிட்டது.

தோல்வி

தோல்வி

முதல் போட்டிக்கு பின் நடந்த 4 போட்டிகளில் 2ல் தோல்வி, 2ல் டிரா என்று சென்னை அணி மிக மோசமான ரெக்கார்ட் படைத்தது. இரண்டாவது வெற்றியை சுவைக்க முடியாமல் கஷ்டப்பட்டது. கடைசியாக கோவாவிற்கு எதிராக நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி வென்று இரண்டாவது வெற்றியை சுவைத்தது.

புள்ளிகள் பட்டியல்

புள்ளிகள் பட்டியல்

இதனால் 6 போட்டியில் 2ல் வெற்றி , 2ல் தோல்வி, 2ல் டிரா என்று 8வது இடத்திற்கு சென்னை பின் தங்கி உள்ளது. ஐஎஸ்எல் 2020 தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பான தொடராக அமையவில்லை. ஐபிஎல் 2020 தொடரிலும் இதேபோல் சென்னை அணி மோசமாக சொதப்பியது. முதல் முறையாக ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லாமல் வெளியேறியது.

சென்னை

சென்னை

சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் பார்ம் இழந்தனர், பிராவோ, ராயுடு போன்றவர்கள் காயம் அடைந்தனர். ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்சி அணியிலும் இதேபோல் முக்கியமான வீரர்களை காயம் அடைந்தனர். 2020ம் ஆண்டு ஐஎஸ்எல் மற்றும் ஐபிஎல் என்று இரண்டு பிரபலமான லீக் போட்டிகளிலும் சென்னை ஏமாற்றம் அளித்துள்ளது.

Story first published: Friday, December 25, 2020, 18:55 [IST]
Other articles published on Dec 25, 2020
English summary
Year Ender 2020: This year is not so good for Chennai teams in ISL and IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X