For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018: லண்டன் கிளம்பி சென்றது இந்தியாவின் இளம்படை

16 அணிகள் மோதும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 போட்டிகள் வரும் ஜூலை 21ம் தேதி லண்டனில் தொடங்க உள்ளது.

By Shyamsundar

லண்டன்: 16 அணிகள் மோதும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 போட்டிகள் வரும் ஜூலை 21ம் தேதி லண்டனில் தொடங்க உள்ளது.

அடுத்த கிரிக்கெட் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் மக்கள் கவனிக்க தவறிய, கண்டிப்பாக கவனிக்க வேண்டிய பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்த மாதம் நடக்க உள்ளது.

2018 Womens Hockey World Cup: Indias young squad ready to make the fire

வரும் ஜூலை 21ம் தேதி லண்டனில் தொடங்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி 2018 வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக இந்திய அணி தற்போது லண்டன் கிளம்பி சென்று இருக்கிறது.

இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் 18 வீராங்கனைகளில் 16 வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் புதிதாக விளையாடுகிறார்கள். அந்த அளவிற்கு இந்தியா இளம் அணியை களமிறக்கி உள்ளது. ராணி ராம்பால் தலைமையில் இந்திய அணி களமறிங்கி உள்ளது.

மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் விளையாடுகிறது. இதில் அணிகள் நான்கு நான்காக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். இந்திய அணியின் பிரிவில் இங்கிலாந்து , அமெரிக்கா என்று வலுவான அணிகள் இருப்பதால் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும்.

அதிகபட்சமாக பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. இந்தமுறை அந்த வரலாற்றை மாற்றி எழுதும் என்று நம்பலாம்.

Story first published: Thursday, July 19, 2018, 16:29 [IST]
Other articles published on Jul 19, 2018
English summary
2018 Women's Hockey World Cup: India's young squad ready to make the fire.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X