For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை ஹாக்கியில் ஷாக்.. ஜப்பான் செய்த ஏமாற்று வேலை.. கையும் களவுமாக சிக்கியது

புவனேஸ்வர் : உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானில் தென்கொரியா மோதிய ஆட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெரிய விதிமீறல்கள் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட், கால்பந்து போல் ஹாக்கி போட்டியிலும் ஒரு அணி சார்பாக களத்தில் 11 பேர் தான் விளையாட வேண்டும்.

உலக கோப்பை ஹாக்கி - இங்கிலாந்துக்கு தண்ணீ காட்டிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் நடந்தது என்ன?உலக கோப்பை ஹாக்கி - இங்கிலாந்துக்கு தண்ணீ காட்டிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் நடந்தது என்ன?

விதிமீறல்

விதிமீறல்

ஆனால் கொரியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஜப்பான் 12 வீரர்களை வைத்து களத்தில் விளையாடியது தெரியவந்தது. அதாவது தென்கொரியா அணி இரண்டு கோல்களும் ஜப்பான் ஒரு கோலும் அடித்த நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜப்பான் கூடுதலாக ஒரு வீரரை வைத்து விளையாடியது

விசாரிக்க உத்தரவு

விசாரிக்க உத்தரவு

இது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது .இதனை கள நடுவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டார்களா இல்லை கவனிக்க ஏன் தவறி விட்டார்கள் என்பது குறித்து விசாரிக்க சர்வதேச ஹாக்கி சம்மேளனம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

ஜப்பான் விளக்கம்

ஜப்பான் விளக்கம்

தாங்கள் சிக்கிக் கொண்டது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜப்பான் களத்தில் 12 வீரர்கள் இருந்தார்கள் என்று எங்களுக்கு கண்டிப்பாக தெரியாது. கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்திருக்கும். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். 12 பேர் வைத்து விளையாடும் ஜப்பான அணி தோல்வியை தழுவியது.

போட்டி டிரா

போட்டி டிரா

நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணி ஜெர்மனியுடன் பலபரிட்சை நடத்தியது. இதில் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து போட்டி சமனில் முடிவடைந்தது. இந்திய அணியை பொறுத்தவரை தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் வரும் 19ஆம் தேதி பல பரிட்சை நடத்துகிறது.

Story first published: Wednesday, January 18, 2023, 0:31 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
FIH Mens Hockey 2023- Japan vs Korea match created controversy உலக கோப்பை ஹாக்கியில் ஷாக்.. ஜப்பான் செய்த ஏமாற்று வேலை.. கையும் களவுமாக சிக்கியது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X