For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மனதை சோர்ந்து போகச் செய்தார்கள்.. ஓய்வு முடிவுக்கு தூண்டினார்கள் - சர்தார் சிங்

புவனேஸ்வர் : முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் செப்டம்பர் மாதம் தன் ஓய்வை அறிவித்தார்.

தற்போது தன் ஓய்வு முடிவுக்கு பின்னே இருக்கும் அதிர்ச்சி அளிக்கும் காரணங்களை கூறியுள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோயர்ட் மரிஜ்னே மற்றும் திறன் மேம்பாட்டு இயக்குனராக இருக்கும் டேவிட் ஜானும் தான் தன்னை ஓய்வு முடிவு நோக்கி தள்ளினார்கள் என கூறியுள்ளார் சர்தார் சிங்.

முக்கிய போட்டிக்கு முன்னே..

முக்கிய போட்டிக்கு முன்னே..

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வந்தது. அப்போது முக்கியமான பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, சர்தார் சிங்கை டேவிட் ஜான் அழைத்துள்ளார். அங்கே மரிஜ்னேவும் இருந்துள்ளார். அங்கே ஜான், சர்தார் நிறைய தவறுகள் செய்வதாகவும், தனிப்பட்ட முறையில் போட்டியில் ஆடுவதாகவும் கூறியுள்ளார்.

அணியில் நிரந்தர இடம் இல்லை

அணியில் நிரந்தர இடம் இல்லை

இந்த சம்பவத்தை விவரித்த சர்தார் சிங், ஒரு முக்கிய போட்டிக்கு முன் இதை பற்றி ஏன் பேச வேண்டும். இதனால் தான் என்ன மனநிலையில் இருந்தேன் என உங்களுக்கே புரியும் என தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு பின்னர், சர்தார் சிங்குக்கு அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்கவில்லை.

ஜூனியர் அணியோடு அனுப்பினார்கள்

ஜூனியர் அணியோடு அனுப்பினார்கள்

முக்கிய தொடர்களான காமன்வெல்த் போட்டிகள், உலக ஹாக்கி லீக் ஆகியவற்றில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாகவும், பின்னர் மலேசியாவுக்கு ஜூனியர் அணியோடு தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறினார் சர்தார் சிங்.

சர்தார் ஓய்வு முடிவு

சர்தார் ஓய்வு முடிவு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னர் சர்தார் சிங்கை மீண்டும் அணியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் தன் ஓய்வு முடிவை அறிவித்தார். 2020 ஒலிம்பிக் போட்டிகள் வரை தான் அணியில் இடம் பெற முடியுமா என தெரியாத நிலையில் இந்த முடிவை எடுத்ததாக கூறினார் சர்தார்.

Story first published: Saturday, December 1, 2018, 13:22 [IST]
Other articles published on Dec 1, 2018
English summary
Former Indian Hockey captain reveals the shocking reason behind his retirement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X