For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிக்கெட் மட்டும் பார்க்காமல் ஹாக்கியையும் கொஞ்சம் கவனிங்கப்பா!

By Aravinthan R

டெல்லி : இந்திய ஹாக்கி அணி எசியம் கேம்ஸில் பங்கேற்க இந்தோனேசியா கிளம்பியுள்ளது. சென்ற ஏசியன் கேம்ஸில் தங்கம் வென்று சாதித்த இந்திய ஹாக்கி, இந்த தொடரிலும் தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் தடுமாறி வரும் நிலையில், சிறப்பாக செயல்பட்டு வரும் நம் ஹாக்கி அணியை பற்றி அதிகம் பேசவோ, உற்சாகம் அளிக்கவோ அதிகம் ஆட்கள் இல்லை என்பதே வேதனையான விஷயம்.

இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றது. தரவரிசையில் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தியது. ஆனால், இந்த செய்திகள் பெரிய அளவில் மக்களிடையே சென்று சேரவில்லை என்பதே உண்மை. கிரிக்கெட்டில் களத்தில் நடக்கும் சம்பவங்களைத் தாண்டி பல விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால், நம் ஹாக்கி வீரர்களை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்வதில்லை.

கிரிக்கெட் பிம்பம் கோஹ்லி

கிரிக்கெட் பிம்பம் கோஹ்லி

விராட் கோஹ்லிதான் இந்தியாவிலேயே அதிக உடற்தகுதி உடைய இந்தியாவின் விளையாட்டு வீரர் என்ற பிம்பம் சில நாட்கள் முன்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு காரணம், கிரிக்கெட் என்ற பிரபலமான விளையாட்டும், அதில் புதிதாக புகுத்தப்பட்ட யோ-யோ எனப்படும் உடற்தகுதி தேர்வும் தான்.

கண்ணை மறைக்கும் கிரிக்கெட்

கண்ணை மறைக்கும் கிரிக்கெட்

அந்த யோ-யோ தேர்வில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தடுமாற, கோஹ்லி 19 புள்ளிகள் பெற்று யோ-யோ தேர்வில் அதிக தூரம் ஓடியவர் என்ற பெயரையும் பெற்றார். எனினும், இது கிரிக்கெட் வீரர்களுக்குள் மட்டும் தான். இந்த செய்தி பரவியதை அடுத்து, கோஹ்லி இந்தியாவின் உடற்தகுதிக்கான தூதுவர் போல பார்க்கப்பட்டார். இந்திய பிரதமருக்குக் கூட உடற்தகுதி சவால் விடுத்தார்.

கோஹ்லியை முந்திய சர்தார்

கோஹ்லியை முந்திய சர்தார்

ஆனால், அதிகம் வெளியே தெரியாத ஹாக்கி வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் அதே யோ-யோ தேர்வில் 21.4 புள்ளிகள் பெற்று இருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே அவர் 21.3 புள்ளிகள் பெற்றவர். தற்போது தன் மதிபீட்டை, தானே முறியடித்துள்ளார். கூடுதல் செய்தி, இவருக்கு 32 வயது ஆகிறது. இவர் தான், சென்ற ஏசியன் கேம்ஸில் இந்தியா தங்கம் வெல்லும் போது கேப்டனாக இருந்தவர்.

ஹாக்கியையும் கவனிப்போம்

ஹாக்கியையும் கவனிப்போம்

ஹாக்கி வீரர்களும் வயது வித்தியாசம் பார்க்காமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் கோல் அடிக்கும் போதும், வெற்றிகளைப் பெறும் போதும் உற்சாகப்படுத்தினால் மட்டும் போதும். அது அவர்களை பல மடங்கு அதிகம் உழைக்கச் செய்யும்.

Story first published: Thursday, August 16, 2018, 12:47 [IST]
Other articles published on Aug 16, 2018
English summary
Hockey player Sardar Singh beats Kohli and other cricket players in Yo-Yo score.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X