For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாக்கி உலகக்கோப்பை 2018 : இந்தியாவை வீழ்த்தியது நெதர்லாந்து.. நிறைவேறாத அரையிறுதிக் கனவு

புபனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை 2018 காலிறுதியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.

முன்னதாக, குரூப் சுற்றில் முதல் இடம் பிடித்த இந்தியா நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற முடியாமல் கிராஸ் ஓவர் சுற்றில் கனடா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Hockey World cup 2018 - Netherlands beat India in the Quarterfinal match

இந்தியா கடைசியாக 1975ஆம் ஆண்டில் தான் ஹாக்கி உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடியது. அதனால், இந்த போட்டிக்கு முன்னர் சுமார் 43 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹாக்கி உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

காலிறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியில் இந்தியாவின் ஆகாஷ்தீப் 12வது நிமிடத்திலும், நெதர்லாந்தின் ப்ரின்க்மேன் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் கால் பகுதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்தன.

ஆட்டத்தின் நான்காவது மற்றும் கடைசி கால் பகுதியில் நெதர்லாந்து அணியின் வான் டேர் வீர்டேன் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதையடுத்து இந்தியா 1-2 என நெதர்லாந்து அணியிடம் காலிறுதியில் தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவின் 43 ஆண்டு கால ஹாக்கி உலகக்கோப்பை அரையிறுதிக் கனவு மீண்டும் நிறைவேறாமல் முடிவடைந்தது.

Story first published: Thursday, December 13, 2018, 23:03 [IST]
Other articles published on Dec 13, 2018
English summary
Hockey World cup 2018 - Netherlands beat India 2-1 in the Quarterfinal match. India’s Semi final dream once again collapsed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X