For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுவர்கள் செய்த அநீதி.. காமன்வெல்த்-ல் தங்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி அணி.. ரசிகர்கள் விளாசல்!

பிர்மிங்கம்: நடுவர்கள் செய்த தவறால் காமன்வெல்த் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு பெரும் தோல்வி அடைந்துள்ளது.

காமன்வெல்த் போட்டிகளின் 8வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தினர்.

குறிப்பாக மல்யுத்தப்போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களை குவித்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஹாக்கிப்போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது.

டி20 உலககோப்பையில் யாருக்கு வாய்ப்பு..டாப் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?பயிற்சியாளர் ஸ்ரீதர் கருத்துடி20 உலககோப்பையில் யாருக்கு வாய்ப்பு..டாப் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?பயிற்சியாளர் ஸ்ரீதர் கருத்து

அரையிறுதிச்சுற்று

அரையிறுதிச்சுற்று

இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் ரெபேக்கா க்ரெய்னர் கோல் அடித்தார். இதனையடுத்து இந்திய அணியும் தனது அட்டாக்கிங் கேமை 2வது கால்பகுதியில் இருந்து தொடங்கியது.

பரபரப்பு கட்டம்

பரபரப்பு கட்டம்

இந்திய அணி நீண்ட நேரமாக போராடியும், ஆஸ்திரேலிய அணியை மீறி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதே போல ஆஸ்திரேலிய அணியும் 2வது கோல் அடிக்க முடியாததால் ஆட்டத்தின் 3வது கால்பகுதி முடிவின் வரை ஆட்டம் 1 - 0 என ஆஸ்திரேலியாவின் பக்கம் தான் இருந்தது. ஆனால் 4வது கால்பகுதியின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு கோல் அடித்து அசத்தினார் வந்தனா கட்டாரியா.

பெனால்டி கார்னர் முறை

பெனால்டி கார்னர் முறை

இரு அணிகளும் 1 - 1 என சமன் ஆனதால் ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தனர். ஆஸ்திரேலிய அணி பெனால்டி கார்னர் மூலம் அடித்த கோலை, இந்தியா தடுத்து நிறுத்தி அசத்தியது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு நடுவர் 2வது வாய்ப்பு வழங்கினார்.

நடுவர்களின் தவறு

நடுவர்களின் தவறு

நேரம் தொடங்குவதற்கு முன்னதாகவே பெனால்டி ஷாட்டை ஆடிவிட்டதாகவும், எனவே மீண்டும் அடிக்குமாறு கூறினர். இந்த முறை இந்தியாவால் கோலை தடுக்க முடியவில்லை. இதே போல இந்தியாவும் கோல் அடிக்காததால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஒருவேளை நடுவர்கள் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம். நேரம் தொடங்குவதற்கு முன்னதாக எப்படி ஆஸ்திரேலிய அணியை நடுவர்கள் விளையாட அனுமதித்தனர். இவ்வளவு பெரிய போட்டியில் இதை ஒரு காரணமாக கூறுவதா என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Story first published: Saturday, August 6, 2022, 6:53 [IST]
Other articles published on Aug 6, 2022
English summary
Commonwealth games 2022 hockey semi finals ( காமன்வெல்த் ஹாக்கி அரையிறுதிப்போட்டி ) காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X