For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு!

Recommended Video

Kamal haasan meets Indian hockey team

புபனேஸ்வர் : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒடிசாவில் இந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்தார்.

டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஒடிசா தலைநகர் புபனேஸ்வருக்கு சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய ஹாக்கி மைதானத்தை பார்வையிட்டார்.

ஒடிசா மாநில அரசு தடகளம் மற்றும் ஹாக்கி விளையாட்டுக்கு என மிகப் பிரம்மாண்ட முறையில் கலிங்கா ஸ்டேடியத்தை அமைத்துள்ளது.

6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி!6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி!

சிறந்த மைதானம்

சிறந்த மைதானம்

சர்வதேச தரத்திலான இந்த மைதானம் போல, இந்தியாவில் வேறு ஒரு விளையாட்டு மைதானம் இல்லை என்று கூறும் அளவுக்கு சிறப்பான வடிவமைப்பு கொண்டுள்ளது. இங்கே உலக அளவிலான தடகள மற்றும் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டமைப்புகள்

கட்டமைப்புகள்

கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த உலகத்தர பயிற்சி மற்றும் கட்டமைப்புகள், தடகள வீரர்களுக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த விளையாட்டு அரங்கம்.

கமல்ஹாசன் பார்வையிட்டார்

நடிகர் கமல்ஹாசன் ஒடிசா சென்ற போது, இந்த பிரம்மாண்ட மைதானத்தை பார்வையிட்டார். அப்போது அங்கே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மற்றும் ஒடிசா எஃப்சி ஹாக்கி வீரர்களை சந்தித்தார்.

இன்ப அதிர்ச்சி

கமல்ஹாசன் வருகையை எதிர்பாராத வீரர்கள் அவரைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இரு அணிகளின் ஜெர்சியை நினைவுப் பரிசாக கமல்ஹாசனுக்கு வழங்கினர்.

செல்பி

இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் மற்றும் மூத்த வீரர் பிஆர் ஸ்ரீஜேஷ் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். ஒடிசா எஃப்சி அணியினரும் அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஒடிசா முதல்வருடன் சந்திப்பு

தன் ஒடிசா பயணத்தின் போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து அரசியல் குறித்து பேசி இருக்கிறார் கமல்ஹாசன். அவரது ஆலோசனைகள் சிலவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த இருப்பதாகவும் ட்விட்டரில் கூறி இருக்கிறார்.

Story first published: Wednesday, November 20, 2019, 15:15 [IST]
Other articles published on Nov 20, 2019
English summary
Kamal Haasan meets Indian Hockey team and Odisha FC team at Kalinga stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X