மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்!

டெல்லி : நாட்டுக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் மேஜர் தயான் சந்த்துக்கு தனி இடம் அளிக்க வேண்டும்.

ஹாக்கி வீரரான தயான் சந்த் 1928, 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி சார்பாக தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவர்.

அவரது சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளில் இந்திய தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

இப்படி ஐபிஎல் நடத்துறது தப்பு.. பொறாமையில் பொங்கிய பாக். வீரர்கள்.. சரமாரியாக விளாசிய மதன் லால்!

தயான் சந்த்துக்கு கௌரவம்

தயான் சந்த்துக்கு கௌரவம்

அந்த நாளில் தான் சிறப்பாக செயல்பட்ட இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது ஆகியவை வழங்கப்படுகின்றன. தயான் சந்த் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

இராணுவத்தில் பணி

இராணுவத்தில் பணி

இந்திய இராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்த தயான் சந்த் இராணுவ ஹாக்கி அணியில் ஆடி வந்தார். அவரது திறமையால் இந்திய அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றார்.

முதல் தங்கம்

முதல் தங்கம்

1928 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த தொடரில் 14 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த ஹாக்கி வீரர் என்ற பெருமையையும் பெற்றார் தயான் சந்த். அதுதான் இந்திய அணி ஒலிம்பிக்கில் வென்ற முதல் தங்கம் ஆகும்.

சாதனை

சாதனை

1932 ஒலிம்பிக் தொடரிலும் ஹாக்கி அணி சார்பாக தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அமெரிக்காவில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க அணியை 24 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இமாலய சாதனை படைத்தது. இந்த 24 கோல் சாதனை 2003இல் தான் முறியடிக்கப்பட்டது.

ஹிட்லர் அழைப்பு

ஹிட்லர் அழைப்பு

1936இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் தொடரிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அப்போது ஹிட்லர், தயான் சந்த்துக்கு ஜெர்மனி குடியுரிமை அளித்து தங்கள் ஹாக்கி அணியில் சேர்க்க முயன்றார் என்றும், அதை தயான் சந்த் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஓய்வு

ஓய்வு

ஓய்வுக்குப் பின் ஹாக்கி பயிற்சியாளராக சிறிது காலம் இருந்த தயான் சந்த், இராணுவத்தில் மேஜராக ஓய்வு பெற்றார். பத்ம பூஷன் விருதை வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. 1979 டிசம்பர் 3 அன்று புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தயான் சந்த் மறைந்தார். அவரை இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

பெருமை சேர்த்தவர்

பெருமை சேர்த்தவர்

அதன் பின் அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்து அந்த நாளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே நாட்டுக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் தயான் சந்த் என்பதை மறுக்க முடியாது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Major Dhyan Chand : The man who brought pride to India before independence. As a hockey player, he brought three gold to India in three consecutive Olympics.
Story first published: Friday, August 7, 2020, 18:50 [IST]
Other articles published on Aug 7, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X